பத்மாசனம்
பத்மாசனம் (Padmasanam) என்பது யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமாம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.
செய்யும் முறை
கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம்.
பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வீராசனம் செய்து பழகியபின், பத்மாசனம் செய்யக் கூடியதாக இருக்கும்.
பலன்கள்
இடுப்பு பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். மனம் ஓய்வடைகிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ எஸ். ரவி (21 சூன் 2017). "சிறார்களுக்கான சூப்பர் யோகாசனங்கள்!". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9731371.ece. பார்த்த நாள்: 22 சூன் 2017.