பத்தினி தெய்வம்
பத்தினி தெய்வம் | |
---|---|
இயக்கம் | நாராயணமூர்த்தி |
தயாரிப்பு | W. S. V. நாயுடு |
திரைக்கதை | கே. எம். கோவிந்தராஜன் |
இசை | விஸ்வநாதன் - ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம்.என். நம்பியார் எஸ்.வி. ரங்காராவ் பி.எஸ்.வீரப்பா ஜே.பி. சந்திரபாபு சாவித்திரி ஜி. வரலக்ஷ்மி |
கலையகம் | வி.ஆர்.வி.ப்ரொடக்க்ஷன்ஸ் |
வெளியீடு | 1957 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பத்தினி தெய்வம் (Pathini Deivam) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். நாராயணமூர்த்தி இப்படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.என். நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பி.எஸ்.வீரப்பா, ஜே.பி. சந்திரபாபு, ஜி. வரலக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- மா. நா. நம்பியார்
- எஸ். வி. ரங்கராவ்
- பி. எஸ். வீரப்பா
- வி. எம். ஏழுமலை
- ஜே. பி. சந்திரபாபு
- சாவித்திரி (நடிகை)
- ஜி. வரலட்சுமி
- ராஜசுலோசனா
- எம். சரோஜா
- கிட்டன்
- கண்ணபிரான்
- திருவேங்கடம்
- எம்.சரோஜா
- ஜெயலட்சுமி
படக்குழுவினர்
- தயாரிப்பாளர்: டபிள்யூ.எசு.வி நாயுடு
- இயக்குனர்: நாராயணமூர்த்தி
- கதை & வசனம்: கே.எம் கோவிந்தராஜன்
- ஸ்டுடியோ: கோல்டன், வாஹினி மற்றும் ரேவதி
கதைச்சுருக்கம்
மருதநாட்டு அரசன் மஹேந்திரனும், குறிஞ்சிநாட்டு அரசன் குலசேகரனும் நண்பர்கள். மஹேந்திரனை சந்திக்க குலசேகரன் வருகிறான். அப்போது மகேந்திரனின் மனைவி சிவகாமியும், மகன் மணிசேகரனும் குலசேகரனை வரவேற்று சில நாட்கள் அவர்களுடன் தங்க வேண்டுகிறார்கள். குலசேகரனை தன் சகோதரனை போலவே நடத்துகிறாள் சிவகாமி. ஆனால், அவர்களின் உறவில் களங்கம் இருப்பதாக அனுமானிக்கிறான் மஹேந்திரன். சிவகாமியை கொல்ல தனது மந்திரி மதியுகியை அனுப்புகிறான் மஹேந்திரன். சிவகாமியை கொல்லாமல், குலசேகரனிடம் உண்மையைச் சொல்லி, குறிஞ்சிநாட்டிற்குச் செல்ல உதவுகிறான் அந்த மந்திரி. சிவகாமி தான் குலசேகரனை தப்பிக்கவைத்தாள் என்று சந்தேகிக்கிறான் மஹேந்திரன்.
கர்பிணி என்றும் பாராமல், சிவகாமியை சிறையில் இடுகிறான். குழந்தை பிறந்த பிறகு, சிவகாமியின் தலையை கொய்ய ஆணை இடுகிறான் மஹேந்திரன். அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. உடனே, சிவகாமியை காட்டிற்கு அழைத்துச் சென்று, கொல்ல மணமில்லாத மருதநாட்டு வீரர்கள், குழந்தையை ஆற்றிலும், சிவகாமியை காட்டிலும் விட்டுவிடுகிறார்கள். ஒரு வேடன் சிவகாமியை காப்பாற்றுகிறான். வேடனின் மனைவி அவனை சந்தேகப்படுகிறாள். அதனால், வேடர்களின் தலைவன் சிவகாமியை மலை மீதிருந்து வீச ஆணையிடுகிறான்.
ஆற்றில் கிடைத்த பெண் குழந்தை, பொன்னி என்ற பெயரில் வளர்ந்து வருகிறாள். குலசேகரனின் மகன் ராஜேந்திரன் தற்செயலாக பொன்னியை சந்திக்க நேரிடுகிறது. அவளை காதல் செய்கிறான். அதே நேரம், மஹேந்திரனின் மந்திரி மார்த்தாண்டன் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சித்தான். சிவகாமிக்கு என்னவானது? மார்த்தாண்டன் வெற்றிபெற்றானா? காதல் ஜோடிகள் இணைந்தனவா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.[1]
ஒலிப்பதிவு
தஞ்சை இராமையாதாஸ் எழுதிய பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர்.[1]
குறிப்புகள்