பண்டிகை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பண்டிகை
இயக்கம்பெரோஸ்
தயாரிப்புவிஜயலட்சுமி அகத்தியன்
கதைபெரோஸ்
இசைஆர். எச். விக்ரம்
நடிப்புகிருஷ்ணா
ஆனந்தி (நடிகை)
ஒளிப்பதிவுஅரவிந்த்
படத்தொகுப்புபிரபாகர்
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பண்டிகை பெரோஸ் இயக்கத்தில், கிருஷ்ணா, ஆனந்தி (நடிகை) உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான தமிழ்திரைப்படம். இத்திரைப்படம் ஆர். எச். விக்ரம் இசையில், அரவிந்தின் ஒளிப்பதிவில், பிரபாகரின் படத்தொகுப்பில் உருவா ன இத்திரைப்படம் 2017இல் வெளியானது.[1]

நடிப்பு

  • கிருஷ்ணா- வேலுவா
  • ஆனந்தி (நடிகை)-காவ்யாவா
  • சரவணன்-முனியாக
  • பாண்டி-திருப்பதியாக
  • சபரிஷ்
  • நித்தின் சத்யா-முந்திரி சேட்டாக
  • கருணாஸ்- இராட்டினம் குமாரா/ இளங்கோவாக
  • மதுசூதன ராவ்- நட்வர் தாதாவா
  • சண்முகராஜன்- காவல் அலுவரலராக
  • அருள்தாஸ்- பீலிங் சுரேசா
  • அர்ஜய்- விக்டராக
  • லோகேஷ்- பாண்டியாக
  • செந்தில்குமாரி- முனியின் மனைவியா

படப்பணிகள்

முதலில் இத்திரைப்படத்தின் கதை விக்ரம் பிரபுவுக்கு சொல்லப்பட்டது. பிறகு அவர் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் இப்படத்தில் ஒப்பந்தத்தில் கிருஷ்ணா, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தில் நித்தின் சத்யா, கருணாஸ் ஆகியோர் துணைப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாயினர்.[2] கதைநாயகியாக ஆனந்தி (நடிகை) நடி ஒப்பந்தமான இத்திரைப்படம் 2015இல் தொடங்கி 14 சூலை 2017 இல் திரையரங்குகளில் வெளியானது.[3][4][5]

கதை

எல்லோரலும் மதிக்கப்படும் அளவிற்குப் பணத்துடன் வாழ நினைக்கும் இயல்பான ஒருவனின் வாழ்வில் நடக்கும் சூதாட்டமும் அதைச்சூழ்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே பண்டிகை திரைப்படம்.[6] நேர்மையாக உழைத்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ நினைக்கிறான் வேலு (கிருஷ்ணா). குடும்பத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ள, சூதாடினாலும் தப்பில்லை என்று எண்ணுகிறான் முனி (சரவணன்). சமூகம் எக்கேடு கெட்டாலும் தன் கருவூலம் நிரம்பினால் போதும் என்று செயல்படுபவன் தாதா (மதுசூதனன் ராவ்). சூதாட்ட சூழ்ச்சி காரணமாக தாதாவிடம் தான் இழந்த பணத்தை வேலு உதவியுடன் பெற்றுவிட ஒரு திட்டம் தீட்டுகிறான் முனி. இதில் வென்றது யார் என்பதே படம்.[7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பண்டிகை_(திரைப்படம்)&oldid=35163" இருந்து மீள்விக்கப்பட்டது