பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில்
பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | சதுர்வேத மங்கலம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவு: | அறந்தாங்கி ரோடு, பட்டுக்கோட்டை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீரங்கநாதசுவாமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | சோழர் காலக் கல்வெட்டுகள் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | புராதனக் கோவில் |
பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் நின்ற கோலத்தில் ஸ்ரீரங்கநாதசுவாமி அமைந்திருக்கும் தலம்.[1] தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இருண்டகாலத்தில் இடிக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று.[சான்று தேவை] சிதிலமடைந்த நிலையிலுள்ள இக் கோயிலின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வெட்டுத் தகவல்கள்
சோழப்பேரரசர்கள் காலத்தில் சோழமண்டலத்து இராஜ இராஜ வளநாட்டு பரண்டையூர் நாட்டு செல்லூர் என்றும் அதன்பின் மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த நினைவாகவும், நான்கு வேதங்களிலும் சிறந்த நானூறு குடும்பங்கள் இவ்வூரில் இருந்து வந்ததாலும் ’பாண்டியனை வெண்கொண்ட சோழ சதுர்வேத மங்கலம் என்றும் பெயர் ஏற்பட்டது. பின்னர் நாயக்கர் காலத்தில் ’பட்டு மழவராயர்’ எனும் கள்ளர் குழுத்தலைவன் வாழ்ந்ததாகவும் அவரால் கோட்டைக் கட்டப்பட்டதாகவும் தஞ்சை அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ குமுதம் ஜோதிடம்: 2.1.2009; பக்கம் 3,4,5,6
- ↑ சோழ நாட்டின் ஊர்-பெயர். 2020. pp. [58].