படுமரத்து மோசிகொற்றனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

படுமரத்து மோசிகொற்றனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 376.

படுமரம் என்பது ஊரின் பெயர். மோசி என்பது தந்தை பெயர்.

பாடல் சொல்லும் செய்தி

பொருள் தேடச் செல்ல நினைக்கும்போது தலைவன் இவ்வாறு நினைத்துப்பார்த்துப் பொருள் செயச் செல்லாமல் தலைவியோடு தங்கிவிடுகிறான்.

வேனில் காலத்துச் சந்தனம் போல அவள் குளுகுளுப்பானவள். கதிரின் வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு குவியும் தாமரை போல வெதுவெதுப்பானவள்.

பொதியில்

மக்கள் நடமாட்டம் இல்லாமல் சூர்மகளிர் நடமாடும் இடம் பொதியில். அந்தப் பொதியில் விளைந்த சந்தனம் போல் தண்ணியாள் என்கிறான்.