பக்கவாத்தியம்
Jump to navigation
Jump to search
ஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.
கருநாடக இசையில் பக்கவாத்தியம்
வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்
பாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகின்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
| குழு எண் | குழு அமைப்பு |
|---|---|
| 1 | பாடகர், மிருதங்கம், வயலின் |
| 2 | பாடகர், மிருதங்கம், வயலின், கஞ்சிரா |
| 3 | பாடகர், மிருதங்கம், வயலின், கடம் |
| 4 | பாடகர், மிருதங்கம், வயலின், மோர்சிங் |
வாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்
வாத்தியத் தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
| முக்கிய இசைக்கருவி | பக்கவாத்தியங்கள் | ஆதாரம் |
|---|---|---|
| வயலின் | மிருதங்கம், கடம் | |
| வயலின் | மிருதங்கம், கஞ்சிரா | |
| புல்லாங்குழல் | மிருதங்கம், கடம் | |
| புல்லாங்குழல் | மிருதங்கம், கஞ்சிரா | |
| மேண்டலின் | மிருதங்கம், வயலின், கடம் | |
| மேண்டலின் (இரட்டை) | மிருதங்கம், கடம் | [1] |
| சாக்சபோன் | வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங் | |
| வீணை | மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் | |
| சித்ரவீணை | மிருதங்கம், வயலின், கடம் | [2] |