நோயல் நடேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நோயல் நடேசன்
Nadesan.jpg
முழுப்பெயர் சின்னத்தம்பி
நடேசன்
பிறப்பு 23-12-1954
பணி மிருக வைத்தியர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
அரசியல் விமர்சகர்
பெற்றோர் அம்பலவாணர்
சின்னத்தம்பி
ஆனந்தராணி
நமச்சிவாயம்
வாழ்க்கைத் சியாமளா
துணை


நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர், விலங்குகளுக்கான மருத்துவர், அரசியல் விமர்சகர், குறிப்பாக ஈழப்போராட்டத்தில் மாற்றுக் கருத்தாளராகச் செயற்பட்டவர்களில் ஒருவர். புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். உதயம் என்னும் மாத இதழை நடத்தியவர். புனைகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று நோயல் நடேசன் பிறந்தார். இயற்பெயர் நோயல் சின்னத்தம்பி நடேசன். ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பலகலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.

இதழியல்

நோயல் நடேசன் ஏப்ரல் 1984-ல் ' உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை “உதயம்” பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார்.

அமைப்புப் பணிகள்

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர்களில் நடேசனும் ஒருவர்.

சிறுகதை தொகுப்புகள்

  • மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை மலைகள் பதிப்பகம்)
  • அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
  • பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)

நாவல்கள்

  • வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
  • உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
  • அசோகனின் வைத்தியசாலை (2016 - கருப்பு பிரதிகள்)
  • கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
  • பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு)

பயண இலக்கியம்

  • நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்)

கட்டுரைத் தொகுப்புகள்

  • வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்)
  • வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்)
  • வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்)
  • எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி)

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்)
  • வண்ணாத்திக்குளம் - சிங்களத்தில் “சமணல வெவ” என்ற பெயரிலும் மடுல் கிரிய விஜயரட்ணவினால் மொழிபெயர்க்கப்பட்டது)
  • உனையே மயல் கொண்டு - Lost in you (மொழிபெயர்த்தவர் - பேராசிரியர் திருமதி பார்வதி வாசுதேவா)
  • அசோகனின் வைத்தியசாலை - King Asoka's Veterinary Hospital (மொழிபெயர்த்தவர் திரு. கிருஷ்ண பிரசாத்)

விருதுகள்

  • வண்ணாத்திக்குளம் - சின்னப்பா பாரதி விருது - 2012
  • மலேசியன் ஏயர்லைன்370 - திருப்பூர் இலக்கிய விருது - 2015
  • அந்தரங்கம் - திருப்பூர் இலக்கிய விருது - 2022

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=நோயல்_நடேசன்&oldid=16905" இருந்து மீள்விக்கப்பட்டது