நைலான் கயிறு (புதினம்)
Jump to navigation
Jump to search
நைலான் கயிறு | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1] [2] |
வெளியிடப்பட்ட நாள் | 2010 (மறுபதிப்பு) |
பக்கங்கள் | 128 |
ISBN | 978-81-8493-402-1 |
நைலான் கயிறு, சுஜாதாவால் 1968-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்ட தொடர்கதை ஆகும். சுஜாதாவின் முதல் நாவலான இக்கதை 14 வாரங்கள் வெளிவந்தது.
மீண்டும் நைலான் கயிறு
மீண்டும் இந்த தொடர் குமுதம் 5-11-2014 இதழிலே ஜெயராஜ் படங்களுடன் ஆரம்பம் ஆகிறது.
கதைக் கரு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது. ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி இந்தக் கொலை வழக்கை விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். வித்தியாசமான நடையில் எழுதப்பட்டு இருக்கும் ஓர் நாவல்.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- சுநந்தா
- கிருஷ்ணன்
- ஹரிணி
- தேவதத்தன்
- இன்ஸ்பெக்டர் மாதவன்
- ராமநாதன்
- ரோகிணி மற்றும் பலர்.