நெல்லை க. பேரன்
நெல்லை க. பேரன் | |
---|---|
முழுப்பெயர் | கந்தசாமி பேரம்பலம் |
பிறப்பு | 18-12-1946 நெல்லியடி, யாழ்ப்பாணம் |
மறைவு | 15-07-1991 (அகவை 44) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கல்வி | நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம் |
பெற்றோர் | கந்தசாமி, பறுபதம் |
வாழ்க்கைத் துணை |
உமாதேவி (இ. 1991) |
நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், 18 திசம்பர் 1946 – 15 சூலை 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.
மறைவு
1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது.
இவரது நூல்கள்
- ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறான் (சிறுகதைகள், 1975)
- விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்)
- வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978)
- சத்தியங்கள் (சிறுகதைகள், 1987)
- பேரனின் கவிதைகள்
- சந்திப்பு (நேர்காணல்கள், 1986)