நெல்லின் ஊர்
Jump to navigation
Jump to search
நெல்லின் ஊர் சங்ககாலத்துத் துறைமுகங்களில் ஒன்று. இது பெரிப்ளஸ் குறிப்பு நூல் பத்தி 54-ல் 'நெல்சிந்தா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகதின் மேற்குக் கடலோரத் துறைமுகங்களில் ஒன்று.
- பாண்டியன் வெற்றி
- இதனைச் சங்ககாலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்று தன் நாட்டுடன் சேர்த்துகொண்டான்.
- நாவாயிலிருந்து இறக்குமதி இந்த ஊரின் துறைமுகத்தில் பொன்னும், விழுமிய பண்டங்களும் நாவாய் என்னும் கப்பல்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.[1]
அயலக மாலுமிகள்
- தாலமி
- தாலமி சாலியூர் எனக் குறிப்பிடுவதும் இந்த ஊரே. தமிழில் நெல்லைச் சாலி எனவும் வழங்குவர்.