நெடுங்கள நாடு
நெடுங்கள நாடு என்பது பாண்டிய நாட்டின் 100 பிரிவுகளில் ஒன்று. தற்போது உள்ள , பெரியகுளம் வட்டாரம் நெடுங்களநாடு என்று அழைக்கப் பட்டது.[1] சங்ககாலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான்[2]. இந்த நாடு அதியமான்களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது. அதிகமான் நெடுமிடல் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் படைத்தலைவனும் ஆவான். [3]அவனது படையில் இருந்த புகழ் மிக்க வீர்கள் இந்தநாட்டுப் பகுதியில் இருந்தவர்கள்.
பாண்டியர்களின் பிரதிநிதியாகவே படையெடுத்துச் சென்று தகடூரை கைப்பற்றி தற்போதைய தர்மபுரி பகுதியில் அதியமான்கள் நிலையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
சங்க இலக்கியங்களில் நெடுங்களத்துப் பரணர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்புலவர் நெடுங்கள நாட்டினை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இந்தப் பகுதியில் தான் புலிமான்கோம்பை, தாதபட்டி போன்ற இடங்களில் இந்தியாவிலேயே பழமையான தமிழி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அடிக்குறிப்பு
1. • நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, (பதிற்றுப்பத்து 32-10)
நீடூர் கிழவோன்வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, (பரணர் பாடல் அகநானூறு 266)
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ... ...
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து
(பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11)
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் (அகம் 266: 12.)
கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14) என்று அகப்பாட்டுக் கூறுகிறது.
- மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3
- பரணர் – குறுந்தொகை 393
- முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 162 - 177.
- மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (186 - 188)/232.
- அகம் 162, 231, 253, 338 குறுந்தொகை 393
- புறநானூறு 206
- சேரமன்னர் வரலாறு -ஔவை துரைசாமி