நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசு
விருது வழங்குவதற்கான காரணம் | "நுண்ணுயிரியல் (நோய்த்தடுப்பு, மூலக்கூறு உயிரியல், மரபியல், முதலியன உட்பட) மற்றும் அதன் பயன்பாடுகளின் சிறந்த பங்களிப்பிற்காக" |
---|
நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசு (Carlos J. Finlay Prize for Microbiology) என்பது கியூபா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஈராண்டுக்கு ஒருமுறை அறிவியல் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகும், இது 1980 முதல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) நுண்ணுயிரியலில் (நோயெதிர்ப்பு, மூலக்கூறு உயிரியல், மரபியல் உள்ளிட்ட) சிறந்த பங்களிப்புகளுக்காக அறிவியலாளர் அல்லது அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. வெற்றியாளர்கள் கியூபா அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடையாக 5,000 அமெரிக்க டாலருடன் யுனெசுகோவின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெள்ளிப் பதக்கத்தினைப் பெறுகிறார்கள்.[1]
இந்தப் பரிசு ஒற்றைப்படை ஆண்டுகளில் வழங்கப்படுகிறது (யுனெஸ்கோவின் பொது மாநாடு நிகழ்வுடன் ஒத்துப்போகிறது). மஞ்சள் காய்ச்சல் துறையில் தனது முன்னோடி கண்டுபிடிப்புகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட கியூபா மருத்துவரும் நுண்ணுயிரியலாளருமான கார்லோஸ் ஜுவான் பின்லே (1833-1915) நினைவாக இப்பரிசிற்குப் பெயரிடப்பட்டது.
வெற்றியாளர்கள்
ஆதாரம் யுனெஸ்கோ
- 1980-ரோஜர் ஒய். இசுடானியர் (கனடா) [2]
- 1983-செசர் மில்சுடீன், (அர்ஜென்டினா, ஐக்கிய இராச்சியம்) [2]
- 1985-விக்டர் நுசென்சுவிக் மற்றும் ரூத் நுசென்ஸ்வீக் (பிரேசில்)[2]
- 1987-கெலியோ கெல்லி பெரேரா (பிரேசில் மற்றும் பீட்டர் ரீச்சார்ட் (சுவீடன்) [de][2]
- 1989-ஜார்ஜசு கோகன் (பிரான்சு) மற்றும் வால்டர் பியர்சு (பெல்ஜியம்)[2]
- 1991-மார்கரிட்டா சாலாசு மற்றும் எலாடியோ வினுயேலா (இசுபெயின்) மற்றும் ஜீன்-மேரி குய்சென் (பெல்ஜியம்) [es]
- 1993-ஜேம்சு மைக்கேல் லிஞ்ச் (இங்கிலாந்து) -ஜேம்சு டைட்ஜே (அமெரிக்கா) -ஜோஹன்னஸ் அன்டோனி வான் வீன் (நெதர்லாந்து) [3]
- 1995-ஜான் பால்சாரினி (பெல்ஜியம்) மற்றும் பாஸ்கேல் கோசார்ட் (பிரான்சு)
- 1996-எட்டியென் பேஸ் (பெல்ஜியம்) மற்றும் சேக் ரியாசுதீன் (பாக்கித்தான்)
- 1999-ஆடம் கொண்டோரோசி அங்கேரி
- 2001-சுசானா லோபசு சார்ரேட்டன் மற்றும் கார்லோசு ஆரியாசு ஆர்டிசு (மெக்சிகோ)
- 2003-அன்டோனியோ பெனா தியாஸ் (மெக்சிகோ) [4]
- 2005-காதிஜா யூசோப் (மலேசியா)[5]
- 2015-யோசிகிரோ கவோகா (சப்பான்)[6]
- 2017-சமீர் குமார் சகா (வங்காளதேசம் மற்றும் சாகிதா கசுனைன் (பாக்கித்தான்)[7]
- 2020-கென்யா கோண்டா (சப்பான்)[8]
- 2023-தில்புசா எகாம்பெர்டியேவா (உசுபெகிசுதான்) [9]
மேற்கோள்கள்
- ↑ "The 2003 Carlos J. Finlay Prize for Microbiology has been awarded to Professor Antonio Peña Diaz from Mexico". UNESCO.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Shabaan, Saad Ahmed; Döbereiner, Johanna; Alvarez-Gaumé, Luis; Sarma, D.D.; Cohen, Georges N.; Fiers, Walter (8 November 1989). "Ceremony of award of four UNESCO science prizes". unesdoc.unesco.org. UNESCO. p. 42. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
- ↑ Federico Mayor (8 November 1993). "Address by Mr Federico Mayor, Director-General of UNESCO, at the ceremony for the presentation of the: 1993 Kalinga Prize for the Popularization of Science, 1993 UNESCO Science Prize, 1993 Javed Husain Prize for Young Scientists, 1993 Carlos J. Finlay Prize, 1993 Sultan Qaboos Prize for Environmental Preservation". unesdoc.unesco.org. UNESCO. p. 5. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
- ↑ "The 2003 Carlos J. Finlay Prize for Microbiology has been awarded to Professor Antonio Peña Diaz from Mexico". UNESCO."The 2003 Carlos J. Finlay Prize for Microbiology has been awarded to Professor Antonio Peña Diaz from Mexico". UNESCO.
- ↑ "World Science Forum opens in Budapest". UNESCO Media Services. 2005-11-10. http://portal.unesco.org/en/ev.php-URL_ID=30740&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html.
- ↑ Carlos J. Finlay UNESCO Prize for Microbiology
- ↑ "UNESCO awards Bangladeshi microbiologist". 2017-10-22. http://www.thedailystar.net/health/unesco-awards-carlos-J-finlay-prize-to-bangladeshi-microbiologist-professor-dr-samir-saha-1479766.
- ↑ "Kenya Honda (Japan) to receive the Carlos J. Finlay UNESCO Prize for Microbiology". 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2021-03-06.
- ↑ Elserafy, Menattallah (9 November 2023). "Dilfuza Egamberdieva, Uzbek scientist behind "super crops", wins UNESCO–Carlos J. Finlay Prize for Microbiology". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.