நீல் தீவு
சாகீது துவீப்பு | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 11°50′N 93°02′E / 11.83°N 93.04°E |
| தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| பரப்பளவு | 13.7 km2 (5.3 sq mi) |
| நீளம் | 3.7 km (2.3 mi) |
| அகலம் | 6.3 km (3.91 mi) |
| கரையோரம் | 19.4 km (12.05 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 101 m (331 ft) |
| உயர்ந்த புள்ளி | நிப்பிள் இல் |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 3040 |
| அடர்த்தி | 222.00 /km2 (574.98 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744104[1] |
| தொலைபேசிக் குறியீடு | 031927[2] |
| ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் | ஐஎன்-ஏஎன்-00[3] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
நீல் தீவு (Neil Island) வங்காள விரிகுடாவின் இரிட்சி தீவுக்கூட்டத்தில் ஒரு தீவாக அமைந்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இத்தீவு, தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.[6] போர்ட் பிளேரிலிருந்து வடகிழக்கே 36 கிமீ (22 மைல்) தொலைவில் நீல் தீவு அமைந்துள்ளது. சாகீது துவீப்பு என்ற பெயராலும் நீல் தீவு அறியப்படுகிறது.
பெயர்க்காரணம்
1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பக்கம் நின்று போராடிய பிரித்தானியப் படைப்பகுதி தளபதி இயேம்சு நீலின் நினைவாக தீவிற்கு நீல் தீவு எனப் பெயரிடப்பட்டது.
டிசம்பர் 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் நேதாஜி சுபாசு சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இது சாகீது துவீப்பு என்று மறுபெயரிடப்பட்டது. போசு 1943 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று போர்ட் பிளேரில் இந்தியக் கொடியை ஏற்றி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை பிரிட்டிசு ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்தார். பின்னர் அவர் அந்தமான் தீவை சாகீது என்றும் நிக்கோபார் தீவை சுவராச்சு என்றும் பெயரிட்டார்.[7]
வரலாறு
1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் குடியேறிகள் வரும் வரை, அப்போது நீல் தீவாக இருந்த சாகீது துவீப்பு மக்கள் வசிக்காத தீவாக இருந்தது. சுவராச்சு துவீப்பு என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஏவ்லாக்கு தீவு என்று அழைக்கப்பட்டது போன்றே, சாகீது துவீப்பில் குடியேறியவர்களில் பெரும்பாலோர் 1971 ஆம் ஆண்டு வங்காளதேச நாட்டின் சுதந்திரப் போருக்கு முன்னர், இந்து வங்காளதேசியர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து முந்தைய கிழக்கு-பாக்கித்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களாவர்.
டிசம்பர் 30, 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி நீல் தீவு என்ற பெயர் சாகீது துவீப்பு என மறுபெயரிடப்படும் என்று அறிவித்தார்.[8]
புவியியல்
நீல் தீவு இரிட்சி தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது மற்றும் ஏவ்லாக்கு தீவுக்கும் ரோசு தீவுக்கும் இடையில் இது அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் இத்தீவு தட்டையான தீவாகும். முக்கியமாக வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. மேலும் நிலப்பரப்பின் பெரும்பகுதி நெல் சாகுபடிக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
நிர்வாகம்
அரசியல் ரீதியாக, நீல் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் நீல் கேந்திரா பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும்.[9]
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நீல் தீவில் உள்ள கிராமங்களில் மொத்தமாக 3040 பேர் இருந்தனர்.:[10]
- சீதாபூர் (274)
- பரத்பூர் (629)
- நீல் கேந்திரா (1000)
- இலட்சுமண்பூர் (382)
- இராம் நகர் (755)
போக்குவரத்து
நீல் கேந்திராவில் ஒரு படகுத்துறை உள்ளது. இது தீவின் ஒரே அணுகல் இடமாக செயல்படுகிறது. போர்ட் பிளேரிலிருந்து நீல் தீவிற்கு வழக்கமான அரசு படகு சேவைகள் உள்ளன. மக்ருசு, கிரீன் ஓசன், நௌடிகா மற்றும் ஐடிடி மெச்சசுட்டிக்கு போன்ற தனியார் பயணக் கப்பல்களும் உள்ளன.
பொருளாதாரம்
கிராமவாசிகளின் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் இந்தத் தீவு அந்தமானின் பிற பகுதிகளுக்கு காய்கறிகளை வழங்குகிறது. நீல் தீவு அதன் கரிம சாகுபடிக்கு பெயர் பெற்று தீவுகளின் மீதமுள்ள பகுதிக்கு கரிம விளைபொருட்களில் பெரும்பகுதியை வழங்குகிறது.
படக் காட்சியகம்
-
நீல் தீவிலுள்ள இயற்கை பாலம்.
-
மாங்குரோவ் மரங்கள்
-
வெப்பமண்டல கடற்கரை
-
படகுத்துறையிலிருந்து பாரத்பூர் கடற்கரை காட்சி
-
அடர்த்தியான காடு
-
இரவு நேர வனப்பகுதி
-
பாரத்பூரிலிருந்து நீல் தீவிற்கு செல்லும் நுழைவாயில் .
-
பாரத்பூர் படகுத்துறை
-
அந்தமான் தீவிற்குள் இரிட்சி தீவுக்கூட்டம்
-
இரிட்சி தீவுக்கூட்டத்தில் நீல் தீவு
-
நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பின்னர் 2004 திசம்பர் 26 அன்று நீல் தீவு,
மேற்கோள்கள்
- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. Retrieved 22 September 2016.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Retrieved 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 10 October 2016.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 284.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ Ananya Bhardwaj (25 December 2018). "Andaman’s most-visited islands to be renamed during PM Modi visit" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/3-andaman-islands-to-get-new-names/story-NC3sWdg8oHAP6sLyXDBEeI.html.
- ↑ "PM Narendra Modi renames 3 islands of Andaman Nicobar". The Times of India. 30 December 2018. https://timesofindia.indiatimes.com/india/pm-narendra-modi-renames-3-islands-of-andaman-nicobar/articleshow/67311660.cms.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 2016-09-23.
- ↑ "Census of India: Sub-District Details".