நீலா ராம்கோபால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீலா ராம்கோபால்
Neela Ramgopal
பிறப்பு25 மே 1935 (1935-05-25) (அகவை 89)
கும்பகோணம், தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிபாடகர்,இசை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1965-முதல்
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது
சங்கீத கலா ஆச்சார்யா
நீலா ராம்கோபால்
இசை வடிவங்கள்கருநாடக இசை
இசைக்கருவி(கள்)குரலிசை

நீலா ராம்கோபால் (Neela Ramgopal) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் கர்நாடக இசை ஆசிரியர் ஆவார். சென்னை மியூசிக் அகாதமியின் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலா ஆச்சார்யா விருது உட்பட நீலா பல விருதுகளைப் பெற்றுள்ளார். அரிணி ராகவன் எழுதிய இவரது வாழ்க்கை வரலாறு நீலா ராம்கோபால் - ஓர் இசைப் பயணம் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சுயசரிதை

நீலா ராம்கோபால் 1935 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தார். பின்னர், இவரது குடும்பம் தியாகராசபுரத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு குடிபெயர்ந்தது. 23 வயதில் தான் நீலா கர்நாடக சங்கீதத்தை தீவிரமாக படிக்க ஆரம்பித்தார். [1] கும்பகோணத்தில் சடகோபாலாச்சாரியாரிடம் கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கிய இவர், பின்னர் என்.எம்.நாராயணன், டி.கே.ரங்காச்சாரி ஆகியோரிடம் மேம்பட்ட பயிற்சிகளைப் பெற்றார். [2]

1965 ஆம் ஆண்டு முதல் நீலா மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார், இவரது முதல் சுதந்திரமான பொது கச்சேரியும் இதே ஆண்டில் நடந்தது.[1] கன்னட எழுத்துக்களில் 50 தமிழ் பாடல்கள் அடங்கிய புத்தகத்தை நீலா வெளியிட்டுள்ளார். [3] கூடுதலாக, இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கிருதிகளின் கேட்பொலி வட்டுகளையும் பதிவு செய்தார்.[3] தமிழ் இன்பம், ராம உபாசனா மற்றும் நாராயண எண்ணிரோ போன்ற இசைத் தொகுப்புகளையும் நீலா வெளியிட்டுள்ளார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

திருமணத்திற்குப் பிறகு, இவர் கர்நாடகாவின் பெங்களூரில் குடியேறினார். [5]

புத்தகங்கள்

  • இராகவன், அரிணி (8 நவம்பர் 2015). நீலா ராம்கோபால் - ஓர் இசைப் பயணம். நாதசுரபி கலாச்சார சங்கம்.[4]

விருதுகளும் கௌரவங்களும்

  • சங்கீத நாடக அகாடமி விருது 2016 [6]
  • குருகிருபா விருது 2017 [3]
  • சென்னை மியூசிக் அகாதமியின் சங்கீத கலா ஆச்சார்யா விருது 2011 [7]
  • காஞ்சனா சிறீ இலட்சுமிநாராயணா மியூசிக் அகாதமி அறக்கட்டளை மூலம் காஞ்சனா சிறீ என்ற தலைப்பு 2018 [8]
  • சென்னை சிறீ கிருட்டிணா கான சபையின் சிறந்த நடிப்புக்கான விருது [2]
  • சென்னை இசை அகாதமியின் சிறந்த நடிகருக்கான விருது [2]
  • நாகர்கோயில் அறக்கட்டளையின் கானா பிரகீர்த்தி விருது [2]
  • ராமகிருட்டிண கானசபாவின் சங்கீத கலா சாம்ராக்னி விருது [2]
  • ராம சேவா மண்டலியின் சங்கீத சூடாமணி விருது [2]
  • கர்நாடக மாநில அரசின் சங்கீத நிருத்ய அகாடமியின் கர்நாடக கலாசிறீ விருது [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நீலா_ராம்கோபால்&oldid=27791" இருந்து மீள்விக்கப்பட்டது