நிலக்கிழார் சாங்கின் நூல்
Jump to navigation
Jump to search
நிலக்கிழார் சாங்கின் நூல் அல்லது சாங் சுன் சூ (ஆங்கிலம்: The Book of Lord Shang, சீனம்: Shang chün shu) என்பது ஒரு சீன சட்டவியல், மெய்யியல் நூல். இந்த நூல் கிமு 359 - கிமு 338 ஆண்டளவில், போரிடும் நாடுகள் காலம் என அறியப்பட்ட காலத்தில் வாழ்ந்த நிலக்கிழார் Shang Yang அவர்களின் கடுமையான சட்ட விதிமுறைகளை விபரிக்கும் நூல் ஆகும். இந்த நூலின் மிகக் கடுமையான கொடுமையான விதிகளை பலர் விமர்சித்து உள்ளார்கள். எனினும் சிலர் அக் காலத்திற்கு இவை தேவைப்பட்டதாகவும் பொருத்தமானதாகவும் நியாப்படுத்தி உள்ளார்கள்.
சாங்கின் கூற்றுப்படி சட்டங்கள் அரசை மக்களிடம் இருந்து நிலையாகப் பாதுகாப்பதற்கானவை. மக்கள் தன்னலம் மிக்கவர்கள், அறிவற்றவர்கள். நல்லது ஒன்றோ அறம் சார்ந்தது என்றோ புறவய நோக்கில் எதுவும் இல்லை. கீழ்படிதலே மிக முக்கியமானது.