நா. தாமோதரம்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நா. தாமோதரம்பிள்ளை
நா. தாமோதரம்பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
நா. தாமோதரம்பிள்ளை
பிறந்ததிகதி மார்ச் 8, 1927
பெற்றோர் நாகலிங்கம்
தங்கம்மா

நா. தாமோதரம்பிள்ளை (பிறப்பு: மார்ச் 8, 1927) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். அதியரசன் நாட்டுக்கூத்தைப்பழக்கும் அண்ணாவியார். வன்னிமாவட்டத்தில் நாடகங்கள் பழக்கி அரங்கேற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை ஊர்காவற்றுறையில் கரம்பன் கிழக்கு கிராமத்தில் நாகலிங்கம், தங்கம்மா இணையருக்கு மகனாக மார்ச் 8, 1927-ல் தாமோதரம்பிள்ளை பிறந்தார். ஏழாம்வகுப்பு வரை தம்பாட்டி அ.த.க பாடசாலையில் படித்தார்.

கலை வாழ்க்கை

முதன்முதலில் 1945-ல் 'அதியரசன்' எனும் புராண வரலாற்று வடமோடி நாடகத்தில் கட்டியனாக நடித்தார். தம்பாட்டி காந்திஜீ நாடக மன்றத்தின் மூலம் பல நாடகங்கள் நடித்தார். வட்டுக்கோட்டை அண்ணாவியார் முருகன் தாமோதரம்பிள்ளையின் குரு. அண்ணாவியார் ஆனாசி அருளப்புவிடம் நாட்டுக்கூத்தை விரிவாகக் கற்றார். தம்பாட்டியில் பாரம்பரிய கலைகளின் வளர்ச்சிக்காக செயல்பட்டார். அதியரசன் நாடகத்தை பல மேடைகளில் நடித்து பாராட்டு பெற்றார். இவர் அரங்கேற்றிய நாடகங்களுக்கு கவிஞர். ஞா.ம. செல்வராசா பாடல்கள் எழுதினார். போர்ச்சூழலில் வன்னிமாவட்டம் இடம்பெயர்ந்தனர். வன்னிமாவட்டத்தில் பல நாடகங்களை மேடையேற்றினார். காவடி, கரகம் தாளலயத்துடன் ஆடுவதில் திறமையானவர்.

சீடர்கள்

  • கே. தவபாலன்
  • நா. பாலசிங்கம்
  • பொ. துரைசிங்கம்
  • இ. மகாலிங்கம்
  • வி. தேவராஜா
  • வி. ராசாகுமார்
  • வி. தவராசா
  • கே. தவபாலன்

அரங்கேற்றிய கூத்துகள்

  • அதியரசன்
  • பண்டாரவன்னியன்
  • ராஜராஜசோழன்
  • சாம்ராட் அசோகன்
  • மந்தாகம்
  • காத்தவராயன்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=நா._தாமோதரம்பிள்ளை&oldid=9668" இருந்து மீள்விக்கப்பட்டது