நா. தர்மராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நா. தர்மராஜன்
நா. தர்மராஜன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நா. தர்மராஜன்
பிறந்ததிகதி 4 ஆகத்து 1935 (1935-08-04) (அகவை 89)
பிறந்தஇடம் சிவகங்கை, தமிழ்நாடு
பணி ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம் இந்தியர்

நா. தர்மராஜன் (பிறப்பு: ஆகத்து 4, 1935) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 120 நூல்களையும் 50 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, சிவகங்கையில் வசதியான வேளாண்மைக் குடும்பத்தில் ஆசிரியர் நாராயண சேர்வைக்குப் பிறந்தவர் தர்மராஜன்.[2] துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1954-இல் மாணவராக இருந்த நாட்களிலேயே தோழர் ஜீவாவின் பேச்சுக்களால் கவரப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்.[3] மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகத்தில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். லியோ தல்ஸ்தோயின் அன்னா கரேனினா, மற்றும் பாரிஸ் கம்யூன், மகாத்மா - சில பார்வைகள் போன்ற பல நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார்.[4]

1978ல் அவர் ஸ்டீன்பெக்கின் நிலவு வந்து பாடுமோ என்ற புதினத்தை மொழிபெயர்த்தார். இ. எம். பாஸ்டரின் பாஸேஜ் டு இண்டியா என்ற நூலை இந்தியா மர்மமும் சவாலும் என்று மொழிபெயர்த்து வெளியிட்டார்.[3] உருசிய தலைநகர் மாஸ்கோவில் இருந்த முன்னேற்றப் பதிப்பகத்தில் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து பணிபுரிந்தார்.[5]

நா.தர்மராஜனின் நேர்காணல்கள், அவருடைய நூல்களைப் பற்றி பல்வேறு இதழ்களில் வெளிவந்த திறனாய்வுகள், மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று "மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் - 80" என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[6]

இவரின் மொழிபெயர்புகள் சில

  • டால்ஸ்டாயின் அன்னா கரீனினா / கஸாக்குகள
  • அலெக்சாந்தர் புஷ்கினின் 'கேப்டன் மகள்'
  • சிங்கிஸ் ஐத்மாத்தவின் 'அன்னை வயல்'
  • ஜே. எம். கோட்ஸியின் 'மைக்கேல் கே. சில குறிப்புகள்'
  • ஹென்றி வோல்கவின் 'மார்க்ஸ் பிறந்தார்'
  • பாரிஸ் கம்யூன்
  • கம்யூனிஸ்ட் அறிக்கை எப்படித் தோன்றியது?
  • அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்'
  • அடுப்பு முதல் அணுஉலை வரை'
  • காக்கி உடையும் காவிக் கொடியும்'
  • டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாந்தர் புஷ்கின் ஆகியோரின் சிறுகதைகள்
  • இத்தாலியக் கதைகள் - மாக்சிம் கார்க்கி (1962) (ஸ்டார் பிரசுரம்)

மேற்கோள்கள்

  1. "Transporting joy through translation". தி இந்து. 27 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2014.
  2. 2.0 2.1 "80-ஐத் தொடும் அன்புத் தோழர் பேராசிரியர் நா.தர்மராஜன்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2016.
  3. 3.0 3.1 ஜெயமோகன். "பேரா.நா.தர்மராஜன்". பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016.
  4. "இலக்கிய பாலம்". தினமலர். 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ஆதி வள்ளியப்பன் (28 அக்டோபர் 2017). "நம் வரலாற்றிலிருந்து புரட்சிக்கான பாதையைச் சமைக்க வேண்டும்! - மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன் நேர்காணல்". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017.
  6. "மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் -80". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நா._தர்மராஜன்&oldid=4844" இருந்து மீள்விக்கப்பட்டது