நானிலம்
Jump to navigation
Jump to search
தமிழர் நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பார்த்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அவை. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்வதை உணர்ந்து பாலை என்னும் நிலத்தையும் கற்பித்துக்கொண்டனர். தமிழ்நாட்டில் பாலைவனம் இல்லை. நிலத்திணையை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்.
- ஐந்திணை
ஐந்திணையை அன்பொடு புணர்ந்த ஐந்திணை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் களவியல் 1 இது அகத்திணை வாழ்க்கையின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
- இவ்வாறு 4 வகையான நிலத்தையும், 5 வகையான ஒழுக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.