நாத்ராவ் நேரல்கர்
நாத்ராவ் நேரல்கர் | |
---|---|
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியால் சங்கீத நாடக அகாதமி விருது (இடது) பெறும் படம் | |
பிறப்பு | 16-நவம்பர்-1935 நாந்தேடு, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இன்றைய நாளில் மகாராட்டிரம்) |
இறப்பு | 28-மார்ச்-2021 அவுரங்காபாத், மகாராட்டிரம் , மகாராட்டிரம், இந்தியா |
பணி |
|
அறியப்படுவது | இந்துசுதானி குரல் இசை |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது |
பண்டிட் [1][2]நாத்ராவ் நேரல்கர் (Nathrao Neralkar) (16 நவம்பர் 1935 - 28 மார்ச் 2021) இந்திய நாட்டின் மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய இந்துசுதானி குரல் இசைக்கலைஞர் மற்றும் இசை ஆசிரியர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் கலைத்துறையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
நாத்ராவ் நேரல்கர் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐதராபாத் மாநிலத்தின் (இன்றைய மகாராட்டிராவில் ) நாந்தேடில் பிறந்தார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். [1]
இந்துசுதானி இசை
நேரல்கர் இந்துசுதானி கிளாசிக்கல் இசையில் ஒரு பாராட்டப்பட்ட குரல் கலைஞர் ஆவார். இவர் "ஆனந்த் சங்கீத் மகாவித்யாலயா" என்ற இசைப் பள்ளியை நிறுவினார். [1] 1973 ஆம் ஆண்டில் இவர் அவுரங்காபாத்தில் உள்ள சரசுவதி புவன் கல்லூரியில் இசை கற்பிக்கத் தொடங்கினார். இறுதியில் இசைத் துறையின் தலைவராக ஆனார். மேலும் 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். [2]
விருதுகள்
இந்துஸ்தானி இசைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசால் கலைத்துறையில் இந்தியாவின் [3] விருதான சங்கீத நாடக அகாடமி விருதை நேரல்கர் பெற்றார். [4]
இறப்பு
நேரல்கர் 10 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் விபத்து காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவுரங்காபாத்தில் மாரடைப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று இறந்தார். [2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Renowned vocalist Pandit Neralkar passes away". The Times of India (in English). 29 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ 2.0 2.1 2.2 "Pandit Neralkar: End of a musical phase". Lokmat Times. 28 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ "Sangeet Natak Akademi Award to UoH professor" (in en-IN). The Hindu. 20 July 2019. https://www.thehindu.com/news/cities/Hyderabad/sangeet-natak-akademi-award-to-uoh-professor/article28614913.ece.
- ↑ "President gives away Sangeet Natak Akademi awards, fellowships". The Indian Express (in English). 24 October 2015. Archived from the original on 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.