நாங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாங்கள்
சுவரிதழ்
இயக்கம்ஹசன்
தயாரிப்புடி. அஜ்மல் ஹசன்
கதைமகேந்திரன்
திரைக்கதைகே. குணா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜே. வில்லியம்ஸ்
படத்தொகுப்புகே. ங்குனி
கலையகம்அரிஃபா புரொடக்சன்ஸ்
வெளியீடுமார்ச்சு 13, 1992 (1992-03-13)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

 

நாங்கள் (Naangal) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஹாசன் இயக்கிய இப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, தீபிகா சிக்லியா ஆகியோர் நடித்தனர். இது 13 மார்ச் 1992 அன்று வெளியானது.[1]

கதை

நேர்மையான காவல் அதிகாரியான கீர்த்தியிடம் ஒரு இரட்டை கொலை வழக்கை தீர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கபடுகிறது. இந்த விவகாரத்தில் கீர்த்தி இன்னொரு காவல் அதிகாரியான நவீன் குமாரை எதிர்கொள்கிறார். பதவி உயர்வுக்காக ஏங்கும் நவீன் குமார் இந்த வழக்கை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார். இதில் கீர்த்திக்கும், நவீனும் மோதல் ஏற்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. ஒரு வழக்கைஇலும் தோல்வியடையாத மூத்த வழக்கறிஞரான சதுர்வேதியை கீர்த்தி இந்த வழக்கிற்காக அமர்த்துகிறார். இந்நிலையில், சதுர்வேதிக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவர் மோனா அவரை கவனித்துக் கொள்கிறார். அவள் அவனை கவனித்துக்கொண்ட விதத்தை அவர் மிகவும் மகிழ்கிறார். அவளை தன் சொந்த மகளாகவே கருதுகிறார். மருத்துவர்கள் ராஜசேகர், மோனா ஆகியோர் மருத்துவர் ஜான்சன் நடத்தும் மருத்துவமனையில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகா சந்தேகிக்கின்றனர். பின்னர் ராஜசேகர் ஒருவரால் கொல்லப்படுகிறார், கொலைக் குவியில் உள்ள கைரேகையின் படி குற்றவாளி மோனா என்ற ஐயம் உருவாகிறது. கீர்த்தியும் சதுர்வேதியும் அவளை காப்பாறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

நடிகர்கள்

பாடல்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

பாடல் பாடகர்(கள்) வரிகள் காலம்
"மானே தேனே" எஸ். ஜானகி, அருண்மொழி வாலி 5:13
"நம்ம பாசு" இளையராஜா, மலேசியா வாசுதேவன் 4:37
"பாரடி குயிலே" (ஆண்) இளையராஜா 4:28
"பாரடி குயிலே" (பெண்) சுவர்ணலதா 4:32
"பார்த்ததென்ன பர்வை" கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:51

வரவேற்பு

இந்தியன் எக்ஸ்பிரசின் என். கிருஷ்ணசாமி எழுதிய விமர்சனத்தில் தொடர்ந்து தமிழ் படங்களில் நிலவிவரும் சில சிந்தனைப் பற்றாக்குறைகளில் இருந்து படத்தின் கதை விடுபட்டுள்ளதால் "கொடுத்த காசுக்கான 'பொழுதுபோக்கு' உத்தரவாதம் அளிக்கிறது" என்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "Naangal / நாங்கள்". Screen 4 Screen. Archived from the original on 18 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  2. "Naangal - Chinnathayee - Tamil Audio CD by Ilayaraaja". Mossymart (in English). Archived from the original on 28 May 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  3. "Naangal (1992)". Raaga.com. Archived from the original on 18 March 2014. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  4. Krishnaswamy, N. (27 March 1992). "Naangal". இந்தியன் எக்சுபிரசு: pp. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920327&printsec=frontpage. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாங்கள்&oldid=34631" இருந்து மீள்விக்கப்பட்டது