நாகர்கோவில் (இலங்கை)
Jump to navigation
Jump to search
நாகர்கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°42′1.81″N 80°18′31.17″E / 9.7005028°N 80.3086583°E |
நாகர்கோவில் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நாகர்கோவில் (Nagarkovil, நாகர்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறைக்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 10,000 ஆகும். இங்கு கடற்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வூர் மக்களில் 99 வீதமானோரும் இந்துக்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள்.
கிராமசேவையாளர் பிரிவுகள்
இது கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
பாடசாலைகள்
1995 இல் போர் அனர்த்தம் காரணம் 26 மாணவர்களைக் காவு கொண்ட பின்னர் பாடசாலைகள் இங்கு 12 ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்குகின்றன.
- நாகர்கோவில் மகா வித்தியாலயம்
- நாகர்கோயில் கனிட்ட தர பாடசாலை
கோயில்கள்
- நாகர்கோயில் நாகதம்பிரான் ஆலயம்
- கெளத்தந்துறை விநாயகர் கோயில்
- முருகையா தேவஸ்தானம்
- கண்ணகி அம்மன் கோயில்