நவின்சந்திரா ராம்கூலம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நவின் ராம்கூலம்
Navin Ramgoolam
2018 இல் ராம்கூலம்
மொரிசியசின் 3-ஆவது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்பிருத்விராஜ்சிங் ரூபுன்
முன்னையவர்பிரவிந்த் ஜக்நாத்
பதவியில்
5 சூலை 2005 – 17 திசம்பர் 2014
குடியரசுத் தலைவர்
முன்னையவர்பவுல் பேரிங்கர்
பின்னவர்அனெரூட் ஜக்நாத்
பதவியில்
27 திசம்பர் 1995 – 11 செப்டம்பர் 2000
குடியரசுத் தலைவர்காசம் உதீம்
முன்னையவர்அனெரூட் ஜக்நாத்
பின்னவர்அனெரூட் ஜக்நாத்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
11 செப்டம்பர் 2000 – 4 சூலை 2005
பிரதமர்
  • அனெரூட் ஜக்நாத்
  • பவுல் பேரிங்கர்
முன்னையவர்பவுல் பேரிங்கர்
பின்னவர்பவுல் பேரிங்கர்
பதவியில்
15 செப்டம்பர் 1991 – 20 திசம்பர் 1995
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்பிரேம் நபாப்சிங்
பின்னவர்நிக்கொலாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நவின்சந்திரா ராம்கூலம்

14 சூலை 1947 (1947-07-14) (அகவை 78)
போர்ட் லூயிஸ், மொரிசியசு
குடியுரிமை
அரசியல் கட்சிதொழிற் கட்சி
துணைவர்வீணா ராம்கூலம் (1979–இன்று)
பிள்ளைகள்சாரா கீரன் சந்திரா சொர்ணக் (பி. 2009)[1][2]
பெற்றோர்
முன்னாள் மாணவர்
தொழில்அரசியல்வாதி, மருத்துவர்
கையெழுத்து

நவீன்சந்திர ராம்கூலம் (Navinchandra Ramgoolam, பிறப்பு: 14 சூலை 1947) மொரிசியசு அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இவரது "மாற்றத்துக்கான கூட்டணி" பெரு வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாக மொரிசியசின் பிரதமரானார்.[3] மொரிசியசின் அரசியல் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இவர் உள்ளார். மொரிசியசுத் தொழிற் கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார்.[4][5][6]

ராம்கூலம் முதல் முறையாக திசம்பர் 1995 முதல் செப்டம்பர் 2000 வரை பிரதமராக இருந்தார், பின்னர் அக்டோபர் 2000 முதல் சூலை 2005 வரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2005 சூலை 5 தேர்தலில், இவரது அலையன்ஸ் சோசியல் கூட்டணி வெற்றி பெற்றதை இரண்டாவது முறையாக பிரதமரானார். 2014 வரை பதவி வகித்தார்.[7]

நவின் ராம்கூலம் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரின் தந்தை மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும், ஆளுநராகவும் இருந்தவர்.[2][8][9]

மேற்கோள்கள்

  1. Peerbaye, Nafisah (19 August 2017). "Pravind Jugnauth : «Linn fer piti li pann decklaré 19-August-2017". L'Express. Retrieved 14 April 2024.
  2. 2.0 2.1 Samoisy, Laura. "Nandanee Soornack en Italie: Elle dévoile la paternité de sa fille pour éviter la déportation". 5Plus. Archived from the original on 13 March 2023. Retrieved 2015-12-15.
  3. AFP (13 November 2024). "Mauritius gets new PM after a clean-sweep election win | New Straits Times". NST Online. Retrieved 13 November 2024.
  4. "Législatives à l’île Maurice : le chef de l’opposition revendique la victoire". 12 November 2024. https://www.lemonde.fr/afrique/article/2024/11/12/legislatives-a-l-ile-maurice-le-chef-de-l-opposition-revendique-la-victoire_6389157_3212.html. 
  5. "Navin Ramgoolam Appointed as Prime Minister of Mauritius – GKToday". www.gktoday.in. https://www.gktoday.in/navin-ramgoolam-sworn-in-as-prime-minister/. 
  6. "Mauritius opposition leader Ramgoolam sworn in as PM after election rout". ddnews.gov.in. https://ddnews.gov.in/en/mauritius-opposition-leader-ramgoolam-sworn-in-as-pm-after-election-rout/. 
  7. "New broom's promise to sweep clean". The New Humanitarian. Retrieved 17 November 2024.
  8. Peerbaye, Nafisah (19 August 2017). "Pravind Jugnauth : «Linn fer piti li pann decklaré 19-August-2017". L'Express. Retrieved 14 April 2024.
  9. "Notes Biographiques" (in பிரெஞ்சு). Labour Party. Archived from the original on 19 செப்டெம்பர் 2013. Retrieved 26 சனவரி 2014.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=நவின்சந்திரா_ராம்கூலம்&oldid=412389" இலிருந்து மீள்விக்கப்பட்டது