நன்மாறன், சித்திரமாடத்துத் துஞ்சிய பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.

புலவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவனை ஞாயிற்றோடும், திங்களோடும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார். பாடலில் இவனைத் ‘தகைமாண் வழுதி’ எனக் குறிப்பிடுகிறார். மார்பில் முத்தாரம் அணிந்திருப்பானாம். இவன் கைகள் நீளமானதாக இவனது முழங்காலுக்குக் கீழ்த் தொங்குமாம். தாள் தோய் தடக்கை. பொய் சொல்லத் தெரியாதவனாம். தேற்றாய் அம்ம பொய்யே பகைவரை ஞாயிறு போல் எரிப்பவனாம். தன் குடிமக்களைத் திங்கள் போல் குளுமை தந்து காப்பவனாம்.[1]

பாடல் குறிப்பில் இவன் பெயர் ‘நன்மாறன்’ என உள்ளது. பாடலுலோ இவன் ‘தகைமாண் வழுதி’ எனப் போற்றப்படுகிறான். எனவே இவன் ‘மாறன் வழுதி’ எனவும் அழைக்கப்பட்டிருக்கிறான் எனத் தெரிகிறது.

மாறன் வழுதி என்னும் மற்றொரு மன்னன் கூடகாரத்துத் துஞ்சியவன் ஆதலால் இருவரையும் ஒருவர் எனக் கொள்ள முடியவில்லை.

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 59