த. செயராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பேராசிரியர் த. ஜெயராமன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர், எழுத்தாளர், தமிழ்த் தேசியர் ஆவார். இவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

வாழ்க்கை

இவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் செயராமன் ஆவார். இவரது பெற்றோர் தங்கவேல், பேச்சியம்மாள் ஆகியோராவர். இவர் தமிழ் ஈழம் கோரிக்கை என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டத்துக்கு ஆய்வும், தமிழ் தேசிய இன அடையாளச் சிக்கல் என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றார்.[1] 1978 முதல் 2012-ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கி போராடி வருகிறார். தமிழர் கண்ணோட்டம், சிந்தனையாளன், சமூக நீதி தமிழ் தேசம் இதழ்களில் - தமிழ் தேசியம், நதி நீர்பிரட்சனை, இந்துதுவம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

போராட்டங்கள்

2014 ஆம் ஆண்டு சூலை மாதம் கும்பகோணத்திலும், 2016 ஆம் ஆண்டு சனவரியில் மயிலாடுதுறையிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி, 25 க்கும் மேற்பட்ட முறை கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார்.

கதிராமங்கலம் போராட்டத்தை தொடக்கம் முதலே ஒருங்கிணைத்த பேராசிரியர் செயராமன், 2017 சூன் 30 ஆம் தேதி மக்களை கலவரத்துக்குத் தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்டு 42 நாட்கள் சிறையில் இருந்து, நிபந்தனை பிணையில் வெளிவந்தார். இவர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. [2]

எழுதிய நூல்கள்

  • நதிகள் இணைப்பு திட்டம்- ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா
  • மீத்தேன் அகதிகள்
  • 20ம் நூற்றாண்டில் இந்திய வரலாறு

தகர்ந்து போன தன்னாட்சி கனவுகளும் தேசிய இனங்களின் உரிமை மீட்பு பயணமும்

  • காவேரி படுகை பாதுகாக்கபட்ட வேலாண்மண்டலம் ஏன்?
  • தமிழ் தேசியம் என்றால் என்ன?
  • இந்துதுவம் எதிர் அரசியல்!

விருதுகள்

  • ஆனந்த விகடன் டாப் டென் மனிதர்கள் விருது, 2020

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=த._செயராமன்&oldid=24987" இருந்து மீள்விக்கப்பட்டது