தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடு

தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடு என்பது தொல்காப்பியத்தின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்றான பொருளியலில் சமூக வாழ்க்கையின் அக வாழ்க்கைத் தவிர்த்த பிற சமூகப் புறவாழ்க்கை சார்ந்த திணைகளுக்காக வகுத்த வாழ்க்கைக் கோட்பாடாகும்.

திணை, துறை விளக்கம்

திணை

திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம், பிரிவு என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இலக்கியத்தில் திணை என்பது ஒழுக்கம், பிரிவு என்ற பொருளில் வந்துள்ளது. மக்கள் கொள்கின்ற ஒழுக்க முறைமையே திணையாகும்.

துறை

துறை என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு ஆகும். இது இடம், கடல்துறை, நீர்த்துறை, நீராடு துறை, பொருள் கூறு வகை, ஒழுங்கு, உபாயம் என்று பல பொருள் பெறும். “தொல்காப்பியத்தில் துறை என்பது திணையின் பல பகுதிகளில் ஒன்றாகவும் வகை என்பது அப்பகுதிகள் பலவற்றை உட்கொண்டதாகவும் விளங்குகின்றன. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலையில இத்தகைய வேறுபாடில்லை, வகை, துறை என்று ஐயனாரிதனார் த

ரும் குறியீடுகள் பொருள் வேறுபாடு அற்றவையாகக் காணப்படுகின்றன.

புறத்திணை விளக்கம்

புறத்திணை என்பது “காதலைத் தவிர ஏனையச் செய்திகள் எல்லாம் புறத்திணையின் பாடு பொருளாகும். எனினும் போர்ச் செய்தியே பேரிடம் பெறுகிறது” புறத்திணை என்பது போர் முறை பற்றியதாகும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். புறத்திணைகள் பற்றி இலக்கண நூல்கள் தரும் விளக்கம். புறத்திணைகளுக்கு இலக்கணம் வகுத்த பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் போன்ற நூல்கள் தரும் விளக்கம்.

“ஆங்ஙனம் உரைப்பின் அவற்றது வகையில் பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடை மரபின் ஏழே ஏனை அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த பாடாண்பாட்டொடு பொதுவியல் என்ப கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அகத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே"

என்று பன்னிருபடலம், புறத்திணைகள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை ஆகிய ஏழும் புறம் ஆகும். வாகை, பாடாண், பொதுவியல் ஆகிய மூன்றும் புறத்துக்கும் புறமானவை ஆகும். கைக்கிளை பெருந்திணை ஆகிய இரண்டும் அகத்திற்கும் புறமான அகப்புறம் எனப் பன்னிரண்டு திணைகளைக் கூறுகின்றது. பன்னிருபடலத்தை அடியொற்றி எழுந்த நூலானப் புறப்பொருள் வெண்பாமாலையும் புறத்திணைகள் பன்னிரண்டு எனக் கூறுகின்றது. ஆனால், தொல்காப்பியர் ஏழுதிணைகளை மட்டும் புறத்திணைகளாகக் குறிப்பிடுகிறார்.

புறத்திணைகள்

தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற போர் முறைகள் “குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களும் தனித்தனியான அரசியல் அமைப்பில் இருந்து காலகட்டத்தில் நடந்த போர் முறைகளைக் குறிப்பனவாகும்.


வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழினைப் புறத்திணைகளாகக் கூறுகிறது தொல்காப்பியம். தொல்காப்பியப் புறத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஏழுதிணைகளும் அகத்திணையியலில் கூறப்பட்ட ஏழு திணைகளோடு இயைபுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. அகத்திணைகளோடு பொருத்திக்காட்ட வேண்டி புறத்திணைகளை ஏழு என்று கூறப்பட்டதாக நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சி - வெட்சி முலலை - வஞ்சி மருதம் - உழிஞை நெய்தல் - தும்பை பாலை - வாகை பெருந்திணை - காஞ்சி கைக்கிளை - பாடாண்

புறத்திணைகளுள் காஞ்சி, பாடாண் ஆகியவை போர்த்தொடர்பான செய்திகளைக் கூறுகிறது.

வெட்சி

காலாட்படையில் சிறுபிரிவுகளிடையே இரவில் நடைபெறும் போர்களைப்பற்றி விளக்குகிறது.

வஞ்சி

நாற்படைகளும் பங்கேற்றுப் போரிடுவதைக் கூறுவது வஞ்சியாகும்

உழிஞை

அரண்மனை மதிலைக் கைப்பற்றுவதனால் ஏற்படும் போர்நிலையைக் கூறுவது உழிஞை.

தும்பை

முழு வலிமையையும் புலப்படுத்தி நாற்படைகளும் போர்க்களத்தே திறந்த வெளியில் ஆற்றும் கடும்போரினைக் கூறுவது தும்பையாகும்.

வாகை

வெற்றி பெற்ற மக்கள் நிலையை, வெற்றி விழாவைச் சித்தரிக்கிறது வாகை.

மேற்கோள்கள்

புலியூர் கேசிகன் உரை - புறப்பொருள் வெண்பா மாலை

இளம்பூரணர் உரை - தொல்காப்பியம் பொருளதிகாரம்