தொன்மை (நூல்வனப்பு)
Jump to navigation
Jump to search
தொன்மை என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று. [1]
கதை உரை இயைந்து வருவது தொன்மை வனப்பியல் என்பது இளம்பூரணர் கருத்து. இந்தத் தொன்மை
- இராம-சரிதம்,
- பாண்டவ-சரிதம்
முதலானவற்றின்மேல் வரும் செய்யுள் என்று இவர் குறிப்பிடுகிறார்.
- பெருந்தேவனாரால் பாடப்பட்ட பாரதம்,
- தகடூர் யாத்திரை
போல்வன தொன்மை என்பது பேராசிரியர் கருத்து.
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக வரும் சிலப்பதிகாரம்
தொன்மை-வனப்பு கொண்ட நூல் என்பது நச்சினார்க்கினியர் கருத்து.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑
- தொன்மை தானே சொல்லுங் காலை
- உரையொடு புணர்ந்த பழமை மேற்றே – தொல்காப்பியம், செய்யுளியல் 229