தொகுப்பு சதுக்கபூதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சதுக்கபூதம் என்பது பூம்புகார் நகரச் சதுக்கத்தில் இருந்த காவல் தெய்வமென சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களைப் பாதுகாக்கும் இப்பூதமானது, பொய் சொல்பவர்களை பிடித்துத் தின்பது, அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளை வழங்கும்.

அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது. சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியாகும். இப்பூதம் சதுக்கத்தில் இருந்து பூம்புகார் நகரை காப்பதால் இப்பெயர் பெற்றது. பெண்களைப் பற்றி புறங்கூறுபவர்களை இப்பூதம் கருணையின்றி கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும்.

சதுக்கபூதம் சிலை

பின்வரும் புகார்க் காண்டப் பாடல் அடி 126 முதல் 140 வரை , சதுக்கபூதம் பற்றி தெளிவாக கூறுகிறது.




சுழல வந்து தொழத்துயர் நீங்கும்

நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,

தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்

அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்

அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்



பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்

கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்

காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்

பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,

அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து



உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்

பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,

மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்

ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,


"https://tamilar.wiki/index.php?title=தொகுப்பு_சதுக்கபூதம்&oldid=10025" இருந்து மீள்விக்கப்பட்டது