தொகுப்பு கலைமகள் (சீனத்துத் தமிழ் எழுத்தாளர்)
Jump to navigation
Jump to search
கலைமகள் என்பவர் சீனாவில் வசிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் சாவோ ஜியாங் (ஆங்கிலம்: Zhao Jiang) தமிழ் மேல் பற்று கொண்ட இவர் தனது சீனப் பெயரைத் தமிழில் கலைமகள் என்று மாற்றிக் கொண்டார். சீன தொடர்பாடல் பல்கலைக்கழகத்தில் தமிழை நான்காண்டுகள் கற்றார்.[1] சிங்ஹீவா பல்கலைக்கழகத்தில் செய்தி, ஊடக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போது தமிழ்ப் பிரிவுத் தலைவராகப் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவு இணையப் பக்கத்தை நிறுவியதில் முதன்மைப் பங்காற்றியவர். சீன - தமிழ் அகராதியை உருவாக்கும் திட்டப்பணியின் பொறுப்பாளராகவும், முதன்மைப் பதிப்பாசிரியராகவும் இருந்து வருகிறார்.[1]
எழுதிய நூல்கள்
- சீனாவில் இன்ப உலா - கௌதம் பதிப்பகம் வெளியீடு (நவம்பர், 2011)
சான்றுகள்
வெளி இணைப்புகள்
- தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன் (தினமணி - கொண்டாட்டம் பகுதியில் கலைமகளின் நேர்காணல்)
- A Tamil voice, from China - The Hindu