தைரிய முத்துச்சாமி
Jump to navigation
Jump to search
தைரிய முத்துச்சாமி (Thiery Moutousammy) லார்டு கொசிட்டி (Lord Kossity) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் ஒரு சொல்லிசைக் கலைஞர். இவர் பிரெஞ்சு அண்டிலிசுவின் மர்தினிக்கு தீவைச் சேர்ந்தவர். தற்போது இவர் பிரான்சு தலைநகர் பாரீசில் வசித்து வருகிறார்[1].
வாழ்க்கைக் குறிப்பு
பாரிசில் பிறந்த தைரிய முத்துசாமி தனது 11வது அகவையில் பெற்றோரின் பிறந்த இடமான கரிபியனில் உள்ள மர்தினிக்கிற்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தார். இவர் தனது இசைப்பயணத்தை 1990களில் தனது உறவினர் ஜெக்கில் என்பவரின் காண்ட்ராஸ்ட் இசைக்குழுவில் ஆரம்பித்தார்[1]. இதன் பின்னர் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டில் மீண்டும் பாரீசிற்குக் குடிபெயர்ந்தார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Gutierrez, Evan C. "Lord Kossity Biography", Allmusic, retrieved 2011-03-05