தேவை உலா
Jump to navigation
Jump to search
தேவை உலா (தேவையுலா) என்னும் நூல் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய நூல். 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தேவை என்பது ஊரின் பெயர். இது இராமேசுவரத்தைக் குறிக்கும். உலா என்னும் சிற்றிலக்கிய வகை நூல்களில் ஒன்று. [1]
தேவையுலா காப்புப் பாடல்
வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்த நூலின் காப்புச் செய்யுள் ஆதியுலா கொண்ட இராமேசன் மேல் இந்த நூல் பாடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.[2]
தேவையுலா பாடலடிகள் எடுத்துக்காட்டு
- நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்
- போர்கொண்ட கண்மலராற் பூசித்தும்-சீர்கொண் 1
- டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்
- செபமன் னியபூசை செய்தும்-இபமென்ன 2
- வந்து பிறந்த மதலையைச் சாம்பனென
- இந்துகுலத் தொன்றுபெய ரிட்டழைத்தும்-வெந்துயரை 3
- மேன்மாற்றும் வில்லோத கேச்சுர லிங்கத்தை
இதில் கூறப்பட்டுள்ள செய்தி
- நீர் கொண்ட கருமேகம் போல் நிறம் கொண்டவன் திருமால். அவன் தன் தாமரை போன்ற கண்-மலரால் சிவபெருமானைப் பூசித்தான். [3] பூசித்த இடம் இந்த ஊர். உபமன்னியு என்பவன் இவ்வூர்ச் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றான். செபம் மன்னிய பூசை செய்தான். 'இபம்' என்னும் குழந்தையாக வந்து பிறந்த ஊர் இது. இவனைச் 'சாம்பன்' [4] என்பர். இவன் சந்திர குலத்தைச் சேஏர்ந்தவன். இந்த ஊர் கொடிய துன்பங்களை மாற்றும். இந்த ஊரிலுள்ள லிங்கத்தின் பெயர் வில்லோத கேச்சுர லிங்கம். [5]
அடிக்குறிப்புகள்
- ↑ "தேவையுலா" இம் மூலத்தில் இருந்து 2012-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121016040739/http://shaivam.org/tamil/sta-devai-ula.htm.
- ↑
ஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற்
சோதியுலாந் தேவையுலாச் சொல்லவே-காதலாம்
தந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய்
தந்தத்தொந் தித்தந்தித் தாள். - ↑ கண்ணை பிடுங்கிப் பூவாகப் போட்டுப் பூசித்தான் என்பது கதை
- ↑ இராமாயணத்தில் வரும் சாம்பவான்
- ↑ தனுசு என்னும் வில் போல் வளைந்துள்ள இடத்தில் அந்த வில் போல் வளைந்து வரும் அலை மோதும் ஈசுர லிங்கம்