தேவகாந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவகாந்தன்
Devakaanthan.jpg
முழுப்பெயர் தேவகாந்தன் பாலா
பிறப்பு சாவகச்சேரி
இருப்பிடம் கனடா
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்


தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா, தொராண்டோவில் வதிகிறார்.

பத்திரிகைப் பணி

1968-1974 வரை ஈழநாடு நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியராக உள்ளார்.

எழுத்துத்துறை

கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

வெளிவந்த நூல்கள்

புதினங்கள்

  • உயிர்ப்பயணம், 1985
  • விதி 1993
  • நிலாச்சமுத்திரம்
  • யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 2004, பூபாலசிங்கம் பதிப்பகம்
  • திருப்படையாட்சி 1998
  • வினாக்காலம் 1998
  • அக்னிதிரவம் 2000
  • உதிர்வின் ஓசை 2001
  • ஒரு புதிய காலம் 2001
  • கனவுச்சிறை  (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம்
  • கலிங்கு, 2017, வடலி பதிப்பகம்[1]
  • கதாகாலம் 2005[2]
  • கந்தில்பாவை, 2016, காலச்சுவடு
  • நதிமேல் தனித்தலையும் சிறுபுள், 2019, நற்றிணை பதிப்பகம்
  • லங்காபுரம் 2007
  • கலாபன் கதை 2019, காலச்சுவடு
  • மேகலை கதா 2020, பூபாலசிங்கம் பதிப்பகம்

சிறுகதைகள்

  • நெருப்பு 1995,  பாரிநிலையம்
  • இன்னொரு பக்கம்
  • காலக்கனா
  • ஆதித்தாய் 2017, ஜீவநதி வெளியீடு

குறும் புதினங்கள்

  • எழுதாத சரித்திரங்கள்
  • திசைகள் 1997, மித்ர வெளியீடு

கட்டுரைகள்

  • நுண்பொருள் : அறம் பொருள் காமம் 2019, அகம் வெளியீடு
  • நவீன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம் 2019, பூபாலசிங்கம் பதிப்பகம்

உரைவீச்சு

  • ஒரு விடுதலைப் போராளி

திரைத்துறையில் பங்களிப்பு

  • ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.
  • In the Name of Buddha என்ற சினிமாவிலும் பங்களித்தார்.

தொலைக்காட்சியில் பங்களிப்பு

  • ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளனாக பணியாற்றினார்.

பரிசுகள் விருதுகள்

  • நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது 1996
  • நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக லில்லி தேவசிகாமணி விருது 1996
  • தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998
  • கனவுச் சிறை நாவலுக்காக Tamil Literary Garden Award - 2014
  • தமிழர் தகவல் விருது 2013

வெளியிணைப்புகள்

  1. "தேவகாந்தனின் கலிங்கு நாவலின் அறிமுக நிகழ்வு". {{cite web}}: Unknown parameter |access date= ignored (help)
  2. "தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் 'கதா காலம் ' நாவல் வெளியீடு". {{cite web}}: Unknown parameter |access date= ignored (help)
"https://tamilar.wiki/index.php?title=தேவகாந்தன்&oldid=2726" இருந்து மீள்விக்கப்பட்டது