தேர்முட்டி மண்டபம், மதுரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தேர்முட்டி, மதுரை மாநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு சன்னதி எதிரில் அமைந்த கீழமாசி வீதியில் உள்ளது. இது மீனாட்சியம்மன் மற்றும் சொக்கநாதர் தேர்களை நிறுத்தி வைக்கப்படும் இடமாகும். தேர்முட்டி மண்டபத்தில் உள்ள மீனாட்சியம்மன் மற்றும் சுவாமிக்கான இரண்டு தேர்கள் அழகிய மரச்சிற்பங்களுடன் கூடியது. மதுரை சித்திரைத் திருவிழாவின் போது தோரோட்டத் திருவிழாவிற்கு தேர்முட்டி மண்டபத்தில் உள்ள அலங்காரம் செய்யப்பட்ட இரண்டு தேர்களில், மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் அமர்ந்து, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளின் வழியாக மதுரை நகரை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பர்.

சித்திரைத் திருவிழா முடிந்த பின் இரண்டு தேர்களையும் தேர்முட்டியில் தனித் தனியாக பைபர் கண்ணாடிகளால் பாதுகாப்பாக மூடி வைப்பர்.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்