தேரே நால் லவ் ஹோ கயா
தேரே நால் லவ் ஹோ கயா | |
---|---|
இயக்கம் | மந்தீப் குமார் |
தயாரிப்பு | குமார் எஸ். தௌரானி |
இசை | சச்சி-ஜிகர் |
நடிப்பு | ரித்தீஷ் தேஷ்முக் ஜெனிலியா |
ஒளிப்பதிவு | சிரந்தன் தாஸ் |
படத்தொகுப்பு | மணீஷ் மோரி |
வெளியீடு | பெப்ரவரி 24, 2012 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹8 கோடி (US$1.0 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹48.18 கோடி (US$6.0 மில்லியன்)[1] |
தேரே நால் லவ் ஹோ கயா என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். இதில் ரித்தீஷ், ஜெனிலியா ஆகியோஎ முதன்மை வேடங்களில் நடித்தனர். குமார் எஸ். தௌரானி தயாரிப்பில் உருவான இப்படம், பிப்பிரவரி 24 ஆம் நாள் வெளியானது.[2]
திரைக்கதை
நாயகியான மினிக்கு திருமணம் என்றால் பிடிக்காது. ஆனாலும், அவள் தந்தை செல்வந்தர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். நாயகனான விரேன் தன் கனவான சொந்த பயண அலுவலகத்தைத் தொடங்க, பெரும்பாடுபடுகிறான். எனவே, நாயகியின் தந்தையிடம் உள்ள ஆட்டோ ஒன்றிற்கு ஓட்டுனராகப் பணிக்குச் சேர்கிறான். தனது சேமிப்புகளை தன் ஆட்டோ இருக்கையின் கீழ் வைக்கிறான். ஒரு நாள் நாயகியின் தந்தை தன் அனைத்து ஆட்டோக்களையும் விற்று புதிய கார்களை வாங்குகிறார். நாயகன் தன் பணம் தொலைந்ததன் காரணமாக குடிக்கிறான். குடித்த நிலையில் நாயகியின் வீட்டு வாசலில் தன் பணத்தைக் கேட்கிறான். அச்சமயம நாயகியின் திருமணப் பேச்சு எழுகிறது. உடனே, நாயகன் ஒரு துப்பாக்கியைக் காட்டி, பணம் தராவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். ஆனால், விட்டுவிடுகிறான். நாயகி தன் தந்தையை சமாளிக்க, நாயகனை தன் தந்தையின் புதிய காரில் தன்னை தொலைவுக்குக் கடத்திச் செல்லுமாறு வேண்டுகிறாள். அவள தந்தையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்க வேண்டும் என்றும் அதில் தன் பங்கான 60,000 ரூபாயைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நாயகனுக்கு அறிவுறுத்துகிறாள். மீதியைத் தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறுகிறாள். அவள் தந்தைக்கு கடிதம் சென்று சேரும் நேரத்தில், இருவரும் காதல் கொள்கின்றனர். நாயகியுடன் நிச்சயமான சன்னி என்பவனும் நாயகியின் தந்தையும் பணத்தைத் தருவதாகக் கூறுகின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் ஏமாற்றுகின்றனர். திடீரென்று பணம் மிரட்டும் கொள்ளை கும்பல் இருவரையும் கடத்திச் செல்கிறது. கடத்திய கொள்ளைக் கும்பல் தலைவன் நாயகனின் தந்தை எனத் தெரிய வருகிறது. தந்தையின் வழியில் செல்ல விரும்பாமல், பாட்டியாலாவில் ஆட்டோ ஓட்டுனராகின்றான். நாயகியின் தந்தை பணம் கொடுத்து நாயகியை மீட்கிறார். நாயகனின் தந்தை நாயகி கடத்தல் தொழில் செய்ய வேண்டுமெனக் கூறுகிறான். நாயகிக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதால் அவளை காதலிக்க வில்லை என்கிறான் நாயகன். தன் தந்தையுடன் செல்கிறாள் நாயகி. பின்னர், நாயகியை கடத்துகிறான் நாயகன். தன் தந்தையின் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். திருமணக் கோலத்தில் சன்னியை எதிர்பார்க்க, நாயகன் விரேன் வருகிறான். இருவரும் கடத்தல் தொழில் நடந்த நாயகனின் வீட்டை டாக்சி ஓட்டுனரகமாக மாற்றுகின்றனர்.
சான்றுகள்
- ↑ "3rd Weekend Collections Of TERE NAAL LOVE HO GAYA". Archived from the original on 18 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ "Tere Naal Love Ho Gaya star cast release date and pictures". Bollywood Inside.