தெய்வப் பாண்டியன்
Jump to navigation
Jump to search
தெய்வப் பாண்டியன் என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டும் கதையில் வரும் ஒரு புராணப் பாண்டியன். அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று இசைநுணுக்கம். இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது. தேவ முனிவராகிய குறுமுனியிடம் (அகத்தியனிடம்) பாடம் கேட்ட மாணாக்கர் 12 பேர். அவர்களில் ஒருவர் சிகண்டி.
மேற்கோள்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005