தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்
தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | தென்திருப்பேரை |
மாவட்டம்: | திருநெல்வேலி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.[1] இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார்.[1]
தலவரலாறு
அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் இத்தலமாகும்.[1]
தல சிறப்பு
- நவகைலாயத் தலங்களில் ஏழாவது தலம்[1]
- நவக்கிரகங்களில் புதனுடையத் தலம்[1]
- நவக்கிரகங்கள் சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் உள்ளனர்.[1]
- அம்மன் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் உள்ளது.[1]
- கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார்.[1]