தெனாவட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெனாவட்டு
இயக்கம்வி.வி. கதிர்
தயாரிப்புஆன்டனி
கதைவி.வி. கதிர்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புஜீவா (திரைப்பட நடிகர்)
பூனம் பாஜ்வா
வெளியீடு21 பிப்ரவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெனாவட்டு (Thenavattu) திரைப்படம் 2008-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வி.வி.கதிர் எழுதி, இயக்க, ஆன்டனி தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூனம் பாஜ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் படங்கள்

நிறுவனம் வெளியிட்டது .

நடிகர்கள்

  • ஜீவா - கோட்டை
  • பூனம் பாஜ்வா - காயத்ரி
  • கஞ்சா கருப்பு - வெள்ளையன்
  • ரவி காலே - கைலாசம்
  • ஷாபி - சந்தோஷ்
  • சாய்குமார் - சூர்யப்ரகாஷ்
  • ராஜன் பி.தேவ் - மந்திரி
  • சரண்யா - கோட்டையின் தாய்
  • டெல்லி கணேஷ் - காயத்திரியின் தந்தை
  • ரேவதி

கதைச்சுருக்கம்

சில மாதங்களுக்கு முன்னால், ராமநாதபுரத்தில் , மர வேலையில் இருக்கும் கோட்டையின் தாய், தன் மகன் பற்றி பெருமை பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கோட்டை வெளியுலகத்திற்கு சென்று அனுபவங்களை பெற்று அதன் நன்மைகளை பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு கோட்டையை சென்னைக்கு அனுப்பி வைக்கிறாள். கோட்டையும் அவனது நண்பன் வெள்ளையனும் (கஞ்சா கருப்பு) சென்னைக்கு செல்கிறார்கள். சென்னை சென்ற இருவரும் உள்ளூர் ரவுடியான கைலாசத்தின் வீட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். கைலாசம் ரவுடி என்ற விஷயம் அந்த இரு நண்பர்களுக்கும் தெரியாது.

கைலாசம் கோட்டையை அரிவாள் செய்யும் வேலை தருகிறார். கோட்டையும் வெள்ளையனும் அந்த அரிவாள்கள் யாவும் மரம் வெட்ட பயன்படுகின்றன என்று நினைத்தனர். அந்நிலையில், வலிப்பு வந்த மனிதர்களுக்கு கோட்டை உதவுகிறான். மேலும், இசை கற்றுக்கொடுக்கும் பெண்ணான காயத்திரியை (பூனம் பாஜ்வா) விரும்புகிறான் கோட்டை.

இந்த சூழ்நிலையில், கைலாசத்தின் மகன் சந்தோஷ் பெண்களிடம் தவறாக நடப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான். சந்தோஷ் ஒரு முறை காயத்திரியை தவறான நோக்கத்துடன் துன்புறுத்துகிறான். கைலாசத்தின் மகன் சந்தோஷ் என்று கோட்டைக்கு தெரியாமல், சந்தோஷை அடித்து கொன்று விடுகிறான். காயத்திரியை கோட்டை திருமணம் செய்தானா? என்பது மீதி கதையாகும்.

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார்.

வரிசை

எண்

பாடல் பாடியவர்
1 எங்கே இருந்தாய் ஹரிஷ்ராகவேந்திரா
2 உசுலம்பட்டி ஷங்கர் மஹாதேவன்,மஹாலக்ஷ்மி
3 ஒன்னு ரெண்டு
4 எனக்கென்ன
5 பட்டாம்பூச்சி

விமர்சனம்

"தெனாவட்டு ஒரு சாதாரண மசாலா படம்"[1] என்றும், "கேலிக்கூத்தான பொருத்தமற்ற படம், அரிவாள் மட்டுமே உள்ளது"[2] என்றும், "இயக்குனர் கதிர் அவரது குருவை போலவே ஒரு படம் எடுத்துள்ளார்"[3] என்றும் பலவிதமான விமர்சனங்கள் இப்படத்தைப் பற்றி கூறப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "www.behindwoods.com".
  2. "www.rediff.com".
  3. "www.indiaglitz.com". Archived from the original on 2007-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தெனாவட்டு&oldid=34352" இருந்து மீள்விக்கப்பட்டது