தூய ஸ்தேவானின் ஆலயம், ஊட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தூய ஸ்தோவான் தேவாலயம், உதகமண்டலம்
St. Stephen's Church, Ooty
தூய ஸ்தோவான் தேவாலயம், உதகமண்டலம்
11°24′53″N 76°42′07″E / 11.414687°N 76.702056°E / 11.414687; 76.702056Coordinates: 11°24′53″N 76°42′07″E / 11.414687°N 76.702056°E / 11.414687; 76.702056
வலைத்தளம்www.ststephenschurchooty.co.in

தூய ஸ்தேவானின் ஆலயம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் மைசூர் – ஊட்டி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழைய தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]

வரலாறு

இதன் வரலாறு 19 ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அப்பொழுது சென்னை மாகாண ஆளுநராய் இருந்த ஸ்டீபன் ரும்போல்ட் லஷிங்க்டன் (Stephen Rumbold Lushington) என்பார் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் ஒரு தேவாலயம் வேண்டும் என்று நினைத்ததன் விளைவாக 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் 23இல் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நாள் ஜார்ஜ் IV  எனும் ஆங்கில அரசரின் பிறந்த நாளாகும். இத்தேவாலயமானது 1830 ஆம் ஆண்டு நவம்பர் 5 ,தேதியில் கொல்கத்தாவின் அப்போதைய பேராயர் (தலைமைப் போதகர்) ஜான் மத்தியாஸ் டர்னர் (John Mathias Turner) அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது . பொதுமக்களின் உபயோகத்திற்காக 1831 ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் நாள் ஈஸ்டர் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டது. 1947 இல் தென் இந்திய திருச்சபையின் கீழ் வந்தது. அப்போது சென்னை படை பிரிவின் தலைவர் ஆக இருந்த ஜான் ஜேம்ஸ் அண்டர்வுட் என்பார் கட்டிட வடிவமைப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கட்டிடக் கலை

இத் தேவாலயத்தின் முக்கிய தூண் மற்றும் கட்டுமான மரங்கள் ஸ்ரீரங்கம் திவீல் இருந்த திப்பு சுல்தான் அரசரின் அரண்மனையில் இருந்து எடுத்து வரப் பட்டதாகும். இந்த கட்டுமான பொருட்கள் சிகுர் மலைத் தொடர்கள் வரை எடுத்து வரப் பட்டன. இக் கட்டுமானப் பணிக்கு ஜே.ஜே. அண்டர்வுட் என்பார் பொறுப்பாளராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இதன் கட்டுமான செலவு 24,000 ஆகும். 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப் பட்டது. மேற்கு பகுதியில் உள்ள சுவரில் கடைசி உணவு எனப் படும் ஓவியம் காணப்படுகிறது. இது கதவின் மேலே உள்ள பகுதி ஆகும். இத் தேவாலயத்தில் உள்ள வண்ண கண்ணாடி ஜன்னல் கதவுகளிலும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணக் காட்சி மற்றும் மேரி குழந்தை ஏசுவை தன் கையில் வைத்திருக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கோபுரத்தில் எல்லா தேவாலயங்களிலும் காணப் படும் கோயில் மணிக்குப் பதிலாக ஆங்கில எழுத்து வீ வடிவத்தில் உள்ள மரப்பலகைகளுக்கு இடையில் நான்கு சுத்தியல் போன்ற அமைப்புக் காணப்படுகிறது. இவற்றில் கயிறு பிணைக்கப் பட்டுள்ளது. இதை நாம் தரையில் இருந்து பிடித்து இழுக்கும் போது இசை உருவாகிறது. இங்கு ஒரு பிரசங்க பீடம் உண்டு அதற்கு செல்ல தேவாலயத்தில் உள்ள வழிபாட்டு மேடையின் இடது பக்கத்தில் உள்ள படிக்கட்டு வழியாக செல்ல வேண்டும்.  இம்மேடையில் வழிபடும் இருக்கை வரிசைகளும் வழிபாட்டுக்கு உபயோகப்படுத்தும் ஆடைகள் வைக்கும் அறையும் காணப்படும்.

மேற்கோள்கள்

  1. "Churches". ooty.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  2. "Ooty Tourist Attractions". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  3. "St. Stephen's Church". tamilnadu-tourism.com. Archived from the original on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)