தூது (இதழ்)
தூது என்பது இலங்கையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் தூதரகத்தால் வெளியிடப்படும் ஓர் இதழாகும். ஆரம்ப காலத்தில் இரண்டு மாதங்களுக்கொரு முறை வெளிவந்த இவ்விதழ் தற்போது இடைக்கிடையே வெளிவந்துகொண்டிருக்கின்றது. 1990ம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியிலிருந்து இவ்விதழ் வெளிவருகின்றது. இதன் பதிவிலக்கம்: QD/126/News/2011.
உள்ளடக்கம்
இவ்விதழில் மத்திய கிழக்கு அரபுலக நாடுகளில் அரசியல், சமகால விவகாரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்தின் வெளியீடாக இவ்விதழ் வெளிவந்த போதிலும்கூட ஈரான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய பன்னாட்டு விவகார ஆய்வு இதழாகவும் குறிப்பாக ஈரானிய கலை கலாசார அரசியல் விவகாரங்களை எடுத்துக்கூறும் இதழாகவும் உள்ளது. வாசகர்களைக் கவரக்கூடிய வகையில் தரமான தாளில் அச்சிடப்பட்டு வர்ண அட்டை முகப்பையும் வர்ணப் படங்களையும் தாங்கி வெளிவருகிறது.
வெளியீட்டு முகவரி
கலாசாரப் பகுதி. ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் தூதரகம். 06 சேர் ஏர்னஸ் டி சில்வா மாவத்தை, கொழும்பு 07