துள்ளும் காலம்
துள்ளும் காலம் (Thullum Kaalam) ஏ. சாரனா இயக்கத்தில், 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லட்சுமி தயாரிப்பில், எஸ். பி. பூபதி இசை அமைப்பில், 29 ஜூலை 2005 ஆம் தேதி வெளியானது. ஷங்கர், ஹீரா, மேகா, வினிதா, ராஜீவ், ஸ்ரீமன், பல்லவி, ரஜினி நிவேதா, குமரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4][5]
நடிகர்கள்
ஷங்கர், ஹீரா, மேகா, வினிதா, ராஜீவ், ஸ்ரீமன், பல்லவி, ரஜினி நிவேதா, குமரிமுத்து, காதல் சுகுமார், கொட்டாச்சி, பயில்வான் ரங்கநாதன், மேனேஜர் சீனா, முருகன், மிமிகிரி செந்தில், தரீக்கா, விவேகா.
கதைச்சுருக்கம்
பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் சிந்துராஜ் என்கிற சிந்து (ஷங்கர்), ஆசிரியையான தன் அக்கா போர்க்கொடி (வினிதா) மற்றும் ராணுவ அதிகாரியான அண்ணன் சந்தோஷ் (முருகன்) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறான். போர்க்கொடி தன் தம்பிகளுக்காக எதுவும் செய்யும் குணம் கொண்டவள். நன்கு படிக்கும் சக மாணவியான தமிழ்ச்செல்வி, சிந்துவை வெறுக்கிறாள். தேர்வில் வெற்றிபெற்ற சிந்து தன் நண்பர்களுடன் கல்லூரியில் படிக்க பட்டணம் செல்கிறான்.
கல்லூரியில், திவ்யா (மேகா) சிந்துவை விரும்புகிறாள். கல்லூரி பாட்டு போட்டியில் பங்குபெற்று முதல் பரிசு பெறுகிறான் சிந்து. சிந்துவை தன் பெற்றோருக்கு அறிமுகப்படுத்த ஆசைப்பட்டாள் திவ்யா. ஆனால், சிந்து பல காரணங்களால் தந்திப்பதை தவறவிட்டான். பின்னர், குடிபோதையில் சிந்து திவ்யாவை தவறாக பேச, கோபம் கொண்ட திவ்யா, சிந்துவை வெறுத்து தன் பெற்றோர்களுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள்.
இதற்கிடையில், ஊர் திரும்பும் சந்தோஷிற்கு தமிழ்ச்செல்வியை திருமணம் செய்து வைக்க விரும்பினாள் போர்க்கொடி. ஆனால், தமிழ்செல்வி அதை மறுத்துவிட்டாள். பின்னர் நிச்சயமாகும் தமிழ்செல்வியின் திருமணம், வரதட்சணையின் காரணமாக நின்றுவிடுகிறது. சிந்துவும் தமிழ்ச்செல்வியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தது எஸ். பி. பூபதி ஆவார். விவேகா, விக்டர் தாஸ், கிருதயா ஆகியோர் எழுதிய பாடல்கள் 2005 ஆண்டு வெளியானது.[6][7]
பாடல்களின் பட்டியல்
- துள்ளும் காலம் (4:45) - திப்பு
- 60 வயதில் (5:13) - பிரசன்ன ராவ்
- தை பிறந்தது (5:40) - பிரபு, ப்ரியா
- செம்பருத்தி (6:06) - ஹரிஷ் ராகவேந்திரா
- எக்களிற (5:07) - ஸ்ரீலேகா பார்த்தசாரதி
மேற்கோள்கள்
- ↑ "http://www.woodsdeck.com". http://www.woodsdeck.com/movies/3303-thullum-kaalam-2005.
- ↑ "www.jointscene.com/" இம் மூலத்தில் இருந்து 2010-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100813175456/http://www.jointscene.com/movies/Kollywood/Thullum_Kaalam_/1883.
- ↑ "http://www.thehindu.com". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/inside-story/article2581046.ece.
- ↑ "http://www.thehindu.com". http://www.thehindu.com/features/friday-review/music/audio-beat-sokkali/article3562727.ece.
- ↑ "http://www.nowrunning.com" இம் மூலத்தில் இருந்து 2018-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180501224933/http://www.nowrunning.com/news/tamil/sokkali-a-playboy-story-with-no-vulgarity/53251/story.htm.
- ↑ "http://mio.to" இம் மூலத்தில் இருந்து 2018-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180312042807/http://mio.to/album/Thullum+Kaalam+(2005).
- ↑ "https://itunes.apple.com". https://itunes.apple.com/in/album/thullum-kaalam-original-motion-picture-soundtrack-ep/1126700101.