துளசி தந்தி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Tulsi R Tanti.JPG
துளசி தந்தி

துளசி தந்தி (Tulsi Tanti) (2 பிப்ரவரி 1958-1 அக்டோபர் 2022) சுஸ்லானின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அறியப்பட்ட ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார். "இந்தியாவின் காற்றாலையின் மனிதர்" என்று அழைக்கப்பட்ட இவர், இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், மே 2006 முதல் பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்ட காற்றாலையின் கியர்பாக்ஸ் உற்பத்தியாளரான ZF விண்ட் பவர் ஆன்ட்வெர்பென் தலைவராக இருந்தார்.[1][2]

2006 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு பணக்கார எரிசக்தி தொழில்முனைவோரில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்பட்டார், மேலும் சுஸ்லான் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய காற்றாலை மின் நிறுவனமாக இருந்தது.[3] இந்தியாவின் குளோபல் வெல்த் கிளப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த இவர், 2008 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பில்லியனர் ப்ளோஅப்களின் பட்டியலிலும் இடம் பெற்றார்.[4][5] 2009 ஆம் ஆண்டில், தொழில்முனைவோர் பார்வை பிரிவில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தால் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தொழில்முறைரீதியாக ஒரு பொறியியலாளரான தந்தி, பிர்லா விஸ்வகர்ம மகாவித்யாலயாவில் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார், தந்தி முதலில் ஒரு சிறிய ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளராகவும் மேலாளராகவும் இருந்தார், ஒழுங்கற்ற மின்சார விநியோகத்தால் பாதிக்கப்பட்டார். இச்சிக்கலைத் தீர்க்க இரண்டு காற்றாலை விசையாழிகளை வாங்கினார். இந்த முயற்சியே இறுதியில் இந்தியாவில் காற்றாலை சக்தியின் உருவாக்கத்திற்கான ஒரு முதல் முயற்சியாக அமைந்தது.[6]

தந்தி தனது 64 வயதில், அக்டோபர் 1,2022 அன்று மாரடைப்பால் இறந்தார்.[7] இவரது மறைவுக்குப் பிறகு வினோத் ஆர் தந்தி தலைவராகவும், கிரிஷ் தந்தி சுஸ்லான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. Karmali, Naazneen. "Tulsi Tanti, India's 'Wind Man' And Former Billionaire, Dies At 64". Forbes (in ஆங்கிலம்). Retrieved 2022-10-06.
  2. "'Wind man of India' Suzlon Energy chairman Tulsi Tanti passes away". Deccan Herald (in ஆங்கிலம்). 2 October 2022. Retrieved 2 October 2022.
  3. Development policy as a way to manage climate change risks. Bert Metz, M. T. J. Kok (2015 ed.). London. 13 February 2015. p. 141. ISBN 978-1-136-56819-0. கணினி நூலகம் 1050521561.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  4. Hiscock, Geoff (2008). India's global wealth club : the stunning rise of its billionaires and the secrets of their success. Hoboken, N.J.: Wiley. pp. 30, 156. ISBN 978-0-470-82238-8. கணினி நூலகம் 173718757.
  5. Pratiyogita Darpan. March 2009. p. 1580. ISSN 0974-6390.
  6. Lama, HRH the Dalai (2011). The Leader's Way : Business, Buddhism and Happiness in an Interconnected World. Laurens van den Muyzenberg. London: Nicholas Brealey Pub. ISBN 978-1-85788-421-0. கணினி நூலகம் 784883396.
  7. The hindu Bureau, BL Mumbai (2 October 2022). "Suzlon founder Tulsi Tanti passes away". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). Retrieved 2 October 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=துளசி_தந்தி&oldid=402038" இலிருந்து மீள்விக்கப்பட்டது