துரை. மாலிறையன்
Jump to navigation
Jump to search
துரை. மாலிறையன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
துரை. மாலிறையன் |
---|---|
பிறந்தஇடம் | தமிழ் நாடு |
பணி | எழுத்தாளர் |
துரை. மாலிறையன் புதுச்சேரி, மங்கலட்சு நகர், முதுன்மைத்தெரு எனும் முகவரியில் வசித்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், படைப்பாளரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், பல்வேறு பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றவருமாவார்.
நூல்கள்
காப்பிய நூல்கள்
- காதற்கனிகள்
- குழந்தைகள் விரும்பும் நேரு காவியம்
- பாவேந்தர் காப்பியம்
- கல்வி வள்ளல் காமராசர் காவியம்
- தீண்டாமையை ஒழித்த அம்பேத்கார் காவியம்
- அருள்ஒளி அன்னை தெரேசா காவியம்
- அருள்நிறை மரியம்மை காவியம்
- இறைப்பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்
சிறார் நூல்கள்
- இளங் குருத்துக்கள்
- பசுமையின் கண்ணீர்
- தேன்பூக்கள்
- முத்தமிழ்ச் சோலை
- மொழிப்பயிற்சிப் பாடல்கள்
- திருக்குறள் பூங்கா
- பாடி விளையாடு பாப்பா
- அறிவூட்டும் கதைப்பாடல்கள்
- ஒலிப்பயிற்சிப் பாடல்கள்
- கணக்குப் பயிற்சிப் பாடல்கள்
- அறிவொளியும் அறியாமை இருளும்
- சிரிக்கும் இளம்பிறை
- அறிவியல் விடுகதைகள்
- அறிவியல் வானிலே
- கதைகளில் அறிவியல் புதிர்கள்
பொது நூல்கள்
- தமிழ் எழுச்சிக் குறள்
- தமிழ் எழுச்சி முழக்கம்
- தமிழ் எழுச்சி நூறு
- தமிழ் எழுச்சி விருத்தம்
- திருக்குறள் விளக்கவுரை
- தமிழ் எழுச்சி ஆத்திசூடி (குறளும் பொருளும்)
- இனிப்பும் கசப்பும் (தமிழ் உணர்வுப்பாடல்கள்
விருதுகள்
- புதுவை அரசின் தமிழ்மாமணி விருது.
- உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய தமிழ்மாமணி பட்டம்.
- புதுவை அரசின் சிறந்த தமிழாசிரியர் விருது.
- இந்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது.
- அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது.
- புதுவை கடலூர் கத்தோலிக்க மறை மாவட்டம் வழங்கிய ஆன்மிகக் கவிஞர் பட்டம்.
- திருச்சி கலைக்காவிரி கல்லூரி வழங்கிய கலைக்காவிரி விருது.
- நெல்லை மாவட்டத் திருவருட் பேரவை வழங்கிய சமய நல்லிணக்கச் சான்றோன் பட்டம்.
- திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் வழங்கிய வீரமாமுனிவர் விருது.
- குழந்தைகள் விரும்பும் நேரு காவியம் நூல், 1988-ல், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறார் நூலுக்கான பிரிவில் பரிசு பெற்றது.
- பாவேந்தர் காவியம் நூலுக்கு, 1989-ல், பாவேந்தர் நூற்றாண்டு விழாவையிட்டி புதுவையில் நடந்த விழாவில், பாவேந்தர் புகழ்ப் பரிசு புதுவை அரசால் வழங்கபட்டது.
- தீண்டாமை ஒழித்த அம்பேத்கர் காவியம் நுல், 1991-ல், புதுவை அரசிடம் இருந்து சிறப்புப் பரிசு பெற்றது.
- அருள்ஒளி அன்னை தெரேசா காவியம், 1994-ல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் காவிய இலக்கியத்திற்கான பரிசைப் பெற்றது.
- அருள் நிறை மரியம்மை காவியம், 1996-ல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் கவிதைக்கான பிரிவில், முதல் பரிசு பெற்றது.
- இறைபேரொளி நபிகள் நாயகம் காவியம், 2000 ஆம் ஆண்டில், புதுவை அரசு நடத்திய விழாவில் கம்பன் புகழ்ப் பரிசு பெற்றது.
- கல்வி வள்ளல் காமராசர் காவியம், 2003-ல், புதுவை அரசு ஜவகர்லால் நேரு பிறந்த தின விழாவினையொட்டி நடத்திய விழாவில் பரிசளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
- துரை. மாலிறையன்
- துரை. மாலிறையன் நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்
- துரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்களில் மொழி
- துரை.மாலிறையனின் ‘தமிழ் எழுச்சி விருத்தம்’: கீற்று தளம்