துனி விசித்திரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

துனி விசித்திரம் (துனிவிசித்திரம்) என்பது சிற்றிலக்கிய வகையில் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1] ஊடலில் விடாப் பிடியாகத் துனி கொண்டிருக்கும் பெண்ணை ஊடல் உணர்த்தி அவளோடு கலத்தலைப் பாடும் நூல் துனிவிசித்திரம் எனப்படும்.

முத்து முலைப் பெண் கலவி பாடிப் பிரிவாய் விரித்து உரைத்தல் அண்ணும் துனிவிசித்திரம் – பாடல் எண் 6.

இது திருக்குறளில் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் வரும் பாடல்கள் போன்ற பொருட்பாங்கினைக் கொண்டிருக்கும்

மேற்கோள்

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
"https://tamilar.wiki/index.php?title=துனி_விசித்திரம்&oldid=16832" இருந்து மீள்விக்கப்பட்டது