தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீர்த்தகிரிசுவரர் கோயில்
பெயர்
பெயர்:தீர்த்தகிரிசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:தீர்த்தமலை
மாவட்டம்:தர்மபுரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தீர்தகிரிசுவரர்
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அம்மாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்
பாடல்
பாடியவர்கள்:அருணகிரிநாதர்
வரலாறு
தொன்மை:கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு

தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அரூருக்கு அருகில் உள்ள தீர்த்தமலையில் உள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் அமைந்துள்ள மலையும் அடிவாரத்தில் உள்ள ஊரும் தீர்த்த மலை என்றே அழைக்கப்படுகின்றன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.[2]

கோயிலின் பழமை

இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்த கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். இதுவே தரும்புரி மாவட்டத்தில் தற்போது உள்ள கோயில்களில் பழமையானது ஆகும்.

தலபுராணம்

தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது.

தீர்த்தங்கள்

தீர்த்த மலையில் இராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. இதில் இராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை என்பது இதன் சிறப்பு.

மேற்கோள்கள்

  1. "தீர்த்தமலை, தர்மபுரி". கட்டுரை. http://tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016. {{cite web}}: External link in |publisher= (help)
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 76.