தீப்தி சதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீப்தி சதி
பிறப்புதீப்தி சதி
29 சனவரி 1995 (1995-01-29) (அகவை 29)
இந்திய ஒன்றியம், மகாராட்டிரம், மும்பை
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி
பணி
  • Actress
  • model
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை
பெற்றோர்
  • Divyesh Sati
  • Madhuri Sati
விருதுகள்

தீப்தி சதி என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகியாவார். இவர் முதன்மையாக மலையாள படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.[1] இவர் 2014 இல் மிஸ் கேரளா பட்டத்தைப் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தீப்தி சதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை திவ்யேஷ் சதி, உத்தரகண்டத்தின் நைனிடால் நகரைச் சேர்ந்தவர். இவரது தாய் மாதுரி சதி கேரளத்தின் கொச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தீப்தி மும்பையின் கணேசா கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைப் படித்தார். பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம் படித்து பட்டம் பெற்றார் .[2]

தொழில்

தீப்தி சதி தனது வவடிவழகி தொழில் வாழ்க்கையை பாண்டலூன் ஃப்ரெஷ் பேஸ் அலங்கார அணிவகுப்பு போட்டியின் வழியாக தொடங்கினார். தீப்தி இம்ப்ரேசரியோ மிஸ் கேரளா 2012 பட்டத்தை வென்றார். ஃபெமினா மிஸ் இந்தியா 2014 இன் முதல் பத்து இறுதிப் போட்டிகளில் ஒருவரான இவருக்கு டேலண்டடு 2014 & மிஸ். அயர்ன் மெய்டன் 2014 என்ற பட்டங்களும் வழங்கப்பட்டன.[3] மேலும் இவர் நேவி குயின் 2013 பட்டத்தையும் வென்றார். மேலும் இந்திய பிரின்சஸ் 2013 போட்டியில் இரண்டாவது இடம் பெற்றார். தீப்தி கதக், பாரதநாட்டியம் ஆகிய இந்திய பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார், மேலும் இவர் மூன்று வயதிலிருந்தே நடனப் பயிற்சி வழங்கப்பட்டது.[4]

லால் ஜோஸ் இயக்கிய 2015 ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான நீ-நா படத்தில் விஜய் பாபு, ஆன் அகஸ்டின் ஆகியோருடன் நடித்த தீப்தி நடிகையாக அறிமுகமானார், அதில் இவர் நடித்த சக்திவாய்ந்த ஆணியல் பெண் பாத்திரத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.[5]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2015 நீ-நா நீனா மலையாளம் அறிமுக மலையாளத் திரைப்படம்
2016 ஜாகுவார் பிரியா கன்னடம்
தெலுங்கு
அறிமுக கன்னட படம்
அறிமுக தெலுங்கு படம்
2017 புல்லிக்கரன் ஸ்டாரா மஞ்சிமா மலையாளம்
2017 சோலோ டெய்ஸி மலையாளம்
தமிழில்
அறிமுகப் படம்
2017 லவகுஷா ஜெனிபர் மலையாளம்
2019 லக்கி ஜியா மராத்தி மராத்தி திரைப்படத்தில் அறிமுகம்
2019 டிரைவிங் லைசன்ஸ் பாமா மலையாளம்
2021 நானும் சிங்கிள்தான் ஸ்வேதா தமிழ்
2021 ரணம் கன்னடம்
2021 லலிதம் சுந்தரம் அறிவிக்கப்படும் மலையாளம் படப்பிடிப்பு
2021 பதோன்பதம் நூட்டண்டு சாவித்ரி / வேலும்பி பானிக்கதி மலையாளம் முன் தயாரிப்பு

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்சி பெயர் பங்கு அலைவரிசை மொழி
2017 மிதுக்கி நடுவர் மழவில் மனோரமா மலையாளம்
2020 காமெடி ஸ்டார் பருவம் 2 நடுவர் ஏஷ்யாநெட் மலையாளம்
2020 சுங்கனு சக்கோச்சன் நிகழ்த்துபவர் ஆசியநெட் மலையாளம்

வலைத் தொடர்

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் வலைப்பின்னல் மொழி
2019 முத்து தீப்தி யூடியூப் மலையாளம்
2019 ஒன்லி பார் சிங்கில்ஸ் ரஞ்சீதா எம்எக்ஸ் பிளேயர் இந்தி
2020 சின் நந்திதா ஆஹா தெலுங்கு
2020 லாக்டவுன் டாக்ஸ் தீப்தி சதி யூடியூப் மலையாளம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது வகை படம் முடிவு
2015 ஆசியாநெட் திரைப்பட விருதுகள் - ஆண்டின் சிறந்த பெண் புதுமுகம் நீ-நா Won
5 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் - சிறந்த அறிமுக நடிகை Nominated[6]
வனிதா திரைப்பட விருதுகள் - சிறந்த அறிமுக நடிகை Nominated
ஆசியவிஷன் விருதுகள் - சிறந்த அறிமுக நடிகை Nominated
ஐஃபா உட்சம் - பெண் முன்னணி பாத்திர செயல்திறன் Nominated
11 வது ராமு காரியத் விருது - சிறப்பு ஜூரி விருது Won[7]

அழகுப் போட்டிகள்

  • இம்ப்ரேசரியோ மிஸ் கேரளா
  • நேவி குயின் 2013
  • இந்திய பிரின்சஸ் 2014 - இரண்டாம் இடம்
  • ஃபெமினா மிஸ் இந்தியா 2014 - மிஸ் டேலண்டட் 2014 & மிஸ் அயர்ன் மெய்டன் 2014.

குறிப்புகள்

  1. "Deepti impressed me the most: Lal Jose". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Deepti-impressed-me-the-most-Lal-Jose/articleshow/46945543.cms. 
  2. "Deepti Sati making her mark". onmanorama. http://english.manoramaonline.com/entertainment/interview/deepti-sati-lal-jose-neena-actress-miss-kerala-bold-and-beautiful-debuts-in-malayalam-film.html. 
  3. "Koyal Rana wins Miss India 2014 title". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/140406/nation-current-affairs/article/koyal-rana-wins-miss-india-2014-title. 
  4. "Deepti Sati". Times of India. http://beautypageants.indiatimes.com/miss-india/contestants/miss-india-2014/Deepti-Sati/contestantprofile/47328972.cms. 
  5. "A girl called Neena". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/a-girl-called-neena/article7141289.ece. 
  6. "SIIMA Nomination list/Malayalam". Archived from the original on 30 April 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  7. "11th Ramu Kariat Award Function". Archived from the original on 9 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தீப்தி_சதி&oldid=22932" இருந்து மீள்விக்கப்பட்டது