தீபா சா
Jump to navigation
Jump to search
| அனன்யா சா | |
|---|---|
| பிறப்பு | மும்பை, இந்தியா |
| பணி | நடிகை, வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 2009–2013 |
தீபா சா (Dipa Shah) என்று அழைக்கப்படும் அனன்யா சா, தென்னிந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தயாரிப்புகள், விளம்பரங்களில் முக்கியமாகப் பணியாற்றும் ஓர் இந்திய நடிகை ஆவார்.
தொழில்
சா தனது திரைப்பட வாழ்க்கையை 2009-இல் தொடங்கினார். இவரது முதல் படம் நின்னு கலிசகா ஆகும். 2010-ஆம் ஆண்டில், இவர் யுத்தம் செய் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் ஒரு பயிற்சி காவல்துறை அதிகாரியாக நடித்தார்.[1] இந்தப் படம் பிப்ரவரி 4, 2011 அன்று வெளியிடப்பட்டது.
சில்லுனு ஒரு சந்திப்பு படத்திலும் சா நடித்துள்ளார்.[2] இதில் தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த, அடக்கமான, ஆனால் வலிமையான மனதுடைய, ஒரு சாதாரணப் பெண், சாருவாக இவர் நடித்தார்.[3][4] இவர் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.[5]
திரைப்படவியல்
| ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி |
|---|---|---|---|
| 2009 | நின்னு கலிசகா | தீப்தி | தெலுங்கு |
| 2011 | யுத்தம் செய் | தமிழ் | தமிழ் |
| 2011 | சைனா டவுன் | சாந்தினி | மலையாளம் |
| 2013 | சில்லுனு ஒரு சந்திப்பு | சாருமதி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Dipa Shah is ready for some action". The Times of India. Archived from the original on 29 July 2013. Retrieved 10 March 2013.
- ↑ "Sillunu Oru Sandhippu - A meeting to avoid". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/sillunu-oru-sandhippu-a-meeting-to-avoid/article4422077.ece. பார்த்த நாள்: 26 February 2013.
- ↑ "Dipa Shah's philosophy of love". The Times of India. Archived from the original on 26 April 2013. Retrieved 10 March 2013.
- ↑ "Dipa Shah explores her girly side". The Times of India. Archived from the original on 1 May 2013. Retrieved 10 March 2013.
- ↑ "Dipa Shah: The new hottie in K-town". Sify. Archived from the original on 24 April 2012. Retrieved 10 March 2013.