தி. ச. சாமண்டிதாசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தி. ச. சாமண்டிதாசு (பிறப்பு: 1936) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கோம்பை எனும் ஊரில் வசித்து வரும் இவர் தஞ்சை கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டமும், அடுத்து இளங்கலை, முதுகலை, கல்வியியல் பட்டங்களைப் பெற்று, தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுத்தொண்டில் ஆர்வலரான இவர் எழுதிய தமிழ்க் கட்டுரைக் கோவை எனும் நூல் எட்டு பதிப்புகள் அச்சிடப்பெற்று விற்பனையாகியுள்ளன. இவர் எழுதிய "ஏலக்காயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே"[1] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Tamil Devotional Books". books.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=தி._ச._சாமண்டிதாசு&oldid=4478" இருந்து மீள்விக்கப்பட்டது