தி. இலக்குமணப்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தி. இலக்குமணப்பிள்ளை

தி. இலக்குமணப்பிள்ளை (1864 - 1950) 19 ஆம் நூற்றாண்டில் நாடகத்தமிழ், இசைத்தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். [1]

பிறப்பும் இளமையும்

இலக்குமணப்பிள்ளை திருவாங்கூர் மன்னர் அரண்மனையில் கணக்கராகப் பணியாற்றிய திரவியம்-வள்ளியம்மாளுக்கு மகனாக 1864 ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்றார். இளம்பருவத்தில் தேவாரப் பாடல்களை மனப்பாடம் செய்து இசையுடன் பாடுவதில் ஆர்வம் கொண்டார். ஐயா பாகவதர் என்பாரிடம் வீணை கற்றார். இவரின் இசைப் புலமை அறிந்த பலரும் இவரிடம் இசை பயின்றனர். தந்தையைப் போலவே இவரும் திருவனந்தபுரம் அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார். [2]

இயற்றிய நூல்கள்

இவர் ஆங்கிலமொழி புலமைமிக்கவர். தாம் திண்ணைப் பள்ளியில் படித்த வரலாற்றை ஆங்கிலக் கவிதையாக எழுதியுள்ளார்.

நாடக நூல்கள்

  • அருமையாள்
  • இரவிவர்மா நாடகம்.

செய்யுள் நூல்

  • நினைவாட்சி எனும் செய்யுள் நூலை 1904 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு பணிகள்

இவர் கிரேக்கமொழி நாடகத்தை, வீலநாடகம் எனும் பெயரில் ஆங்கிலத்திலும், சேக்சுபியரின் சிம்பலின் நாடகத்தை, சத்தியவதி எனும் பெயரில் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.

இசைப் பணிகள்

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு நடத்திய மாநாட்டைத் தொடங்கி வைத்த இவர், அம்மாநாட்டில் தமிழின் இசைவளம் பற்றி சொற்பொழிவாற்றியுள்ளார். மாநாட்டு நிறைவில் இவருக்கு, இசைத் தமிழ்ச் செல்வர் என்ற பட்டமும் வழங்கப்பெற்றது.

மறைவு

தமது 86 ஆவது வயதில் 1950 ஆம் ஆண்டு இவர் காலமானார்.

உசாத்துணைகள்

  • சி. இலக்குவனார், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", கழக வெளியீடு.
  • பெரியபெருமாள், "தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்"- மதி நிலையம்.
"https://tamilar.wiki/index.php?title=தி._இலக்குமணப்பிள்ளை&oldid=4467" இருந்து மீள்விக்கப்பட்டது