திவ்யா பிரபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திவ்யா பிரபா
Divya Prabha Film Festival.jpg
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது வரை
விருதுகள்கேரள மாநில தொலைக்காட்சி விருது

திவ்ய பிரபா ( Divya Prabha ) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ்தமிழ் மொழிப் படங்களில் தோன்றுகிறார். டேக் ஆஃப் [1] மற்றும் தமாஷா ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் பரந்த கவனத்தைப் பெற்றார். [2] 2015 ஆம் ஆண்டில், ஈஸ்வரன் சாக்சியாய் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக சிறந்த இரண்டாவது நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதை வென்றார். [3] மகேசு நாராயணன் இயக்கிய அரிப்பு என்ற திரைப்படத்திற்காக 2022 லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச போட்டிப் பிரிவில் சிறந்த நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார். [4]

நடிப்பு வாழ்க்கை

பிரபா 2013 ஆம் ஆண்டு வெளியான லோக்பால் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். [5] [6] பிரபு சாலமன் இயக்கிய கயல் இவரது முதல் தமிழ் படமாகும். பின்னர், ராஜேஷ் பிள்ளை இயக்கிய வேட்ட படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 2017இல் வெளியான மலையாளத் திரைப்படமான டேக் ஆஃப் படத்தில் செவிலியராக நடித்தார்.[7] 2018 இல், இவர் கம்மர சம்பவம் மற்றும் நான்சென்ஸ் ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்தார். 2019 இல், ரோசன் மேத்யூ இயக்கிய எ வெரி நார்மல் ஃபேமிலி என்றத் திரைப்படத்தில் நடித்தார். [8] அதன் பிறகு தமாஷா படத்திலும் நடித்தார். [9]

மேற்கோள்கள்

  1. Nair, Vidya (27 April 2017). "The Best 'Take Off'" (in English). பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. Mythily Ramachandran (26 June 2019). "'Thamaasha' stars on bringing unlikely heroes into the spotlight". https://gulfnews.com/entertainment/south-indian/thamaasha-stars-on-bringing-unlikely-heroes-into-the-spotlight-1.64849436. 
  3. "'Eswaran Sakshiyayi' wins five State Awards". 2016-06-11. https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/eswaran-sakshiyayi-wins-five-state-awards/articleshow/52701545.cms. 
  4. "Kunchacko Boban, Mahesh Narayanan on Locarno Competition Title 'Ariyippu' (EXCLUSIVE)". 3 August 2022.
  5. Sandy (18 October 2019). "Divya Prabha – Malayalam film and television actress" (in English). பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  6. Sajin Shrijith (11 June 2019). "Rehearsals are so comforting: 'Thamaasha' actor Divyaprabha". http://www.newindianexpress.com/entertainment/malayalam/2019/jun/11/rehearsals-are-so-comforting-1988593.html. 
  7. Nair (27 April 2017). "The Best 'Take Off'". http://www.deccanchronicle.com/entertainment/mollywood/270417/the-best-take-off.html. 
  8. Cris (4 February 2019). "'A Very Normal Family' at Mathrubhumi Lit Fest: Meet the fun cast and crew". https://www.thenewsminute.com/article/very-normal-family-mathrubhumi-lit-fest-meet-fun-cast-and-crew-96200. 
  9. Mythily Ramachandran (26 June 2019). "'Thamaasha' stars on bringing unlikely heroes into the spotlight". https://gulfnews.com/entertainment/south-indian/thamaasha-stars-on-bringing-unlikely-heroes-into-the-spotlight-1.64849436. 

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=திவ்யா_பிரபா&oldid=22925" இருந்து மீள்விக்கப்பட்டது