தில்லையாடி சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தில்லையாடி சார்ந்தாரைக் காத்த நாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

திருக்கடையூருக்குக் கிழக்கில், திருவிடைக்கழி செல்லும் பாதையில் தில்லையாடி என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சாலையின் இடப்புறத்தில் கோயில் வளைவைக் காணலாம்.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள மூலவர் சார்ந்தாரைக்காத்தநாதர் என்றும் சரணாகத ரட்சகர் என்றும் அழைக்கப்படுகிறர். அண்டி வந்தோரைக் காத்தருள்வதால் இறைவன் அப்பெயரைப் பெற்றுள்ளார். இங்குள்ள இறைவி பெரியநாயகி ஆவார். திருமாலும், நவக்கிரகங்களில் சனீஸ்வரனும் வழிபட்ட தலமாகும்.[1]

வரலாறு

சோழ மன்னன் ஒருவன் திருக்கடையூரிலுள்ள கோயிலைப் புதுப்பிப்பதற்கு அமைச்சருக்கு ஆணையிட்டதன் அடிப்படையில் அமைச்சர் இங்கும் திருப்பணி மேற்கொண்டார். தன்னைக் கேட்காமல் அமைச்சர் செய்ததையறிந்த மன்னர் அவருடைய கை கால்களை வெட்ட ஆணையிட்டதாகவும் அப்போது அமைச்சரின் பணியை ஏற்போம் என்று அசரீரியாக இறைவன் உரைத்ததாகவும் கூறுவர். ஐந்து நிலை ராஜகோபுரமும், திருச்சுற்றும் கொண்டு கோயில் அமைந்துள்ளது. இறைவி தனி சன்னதியில் உள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014