திருமாவளவன் (கவிஞர்)
Jump to navigation
Jump to search
திருமாவளவன் (கவிஞர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
திருமாவளவன் (கவிஞர்) |
---|---|
பிறந்ததிகதி | 1955 |
இறப்பு | 5 அக்டோபர் 2015 |
திருமாவளவன் (1955 - 5 அக்டோபர் 2015)[1] இலங்கைக் கவிஞர்.[2][3] இவரது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த கலைச்செல்வனின் சகோதரர். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்தவர்.[3]
வெளிவந்த நூல்கள்
- யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)[3]
- பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.[3]
- அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.[3]
- இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.[3]
இதழியல் பங்களிப்பு
கனடாவில் இருந்து வெளிவந்த 'ழ'கரம் (1996-1997) சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.
விருது
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் திருமாவளவனின் 'இருள்யாழி' கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.[3]
மறைவு
திருமாவளவன் புற்றுநோயின் தாக்கிய நிலையில்,[2] 2015 அக்டோபர் 5 ஆம் நாள் டொராண்டோ, இசுக்கார்பரோ நகரில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "கனடாவில் கவிஞர் திருமாவளவன் காலமானார்". தமிழ் சிஎன்என். 6-10-2015. Archived from the original on 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 11-05-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 2.0 2.1 ஜெயமோகன். "அஞ்சலி – கவிஞர் திருமாவளவன்". பார்க்கப்பட்ட நாள் 11 மே 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 நா. சுப்பிரமணியன் (7-10-2015). "திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை". பதிவுகள் (இணைய இதழ்). Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 11-05-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்ப்புகள்
- “தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” திருமாவளவன் நேர்காணல், வல்லினம், 01-02-2015